24.5 C
Jaffna
January 15, 2025
Pagetamil
இலங்கை

இலங்கையில் பதிவான அதிகபட்ச தொற்று: நேற்று 3,676 தொற்றாளர்கள்!

நேற்று 3,676 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட கோவிட் -19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 369,359 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டு தொற்றுநோய் பரவ ஆரம்பித்ததில் இருந்து நாளொன்றில் பதிவான அதிகபட்ச கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை இதுவாகும்.

நேற்றைய தொற்றாளர்களில் 3,660 பேர் புத்தாண்டு கோவிட் -19 கொத்தணியுடன் இணைக்கப்பட்டுள்ளனர்.

வெளிநாடுகளில் இருந்து சமீபத்தில் நாட்டிற்கு வந்த 16 பேருக்கும் நேற்று கோவிட் -19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

நாடு முழுவதும் 46,397 பேர் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று, கோவிட் -19 இலிருந்து குணமடைந்த 2,188 நபர்கள் மருத்துவமனைகளில் இருந்து வெளியேறினர். இதன் மூலம் நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 316,528 ஆக உயர்ந்துள்ளது.

தொற்று சந்தேகத்தில் 3,524 பேர் தற்போது மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

இதற்கிடையில், நேற்று மேலும் 170 கொரோனா வைரஸ் தொடர்பான இறப்புகள் உறுதி செய்யப்பட்டது. இலங்கையில் பதிவான இறப்பு எண்ணிக்கை 6,604 ஆக உயர்ந்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஜனநாயக போராளிகள் கட்சியின் இளைஞர் அணியின் பொங்கல் நிகழ்வு

east tamil

இரத்தினக் கற்களை கடத்த முயன்ற சீன தந்தை, மகன் கைது

east tamil

சீன ஜனாதிபதியை சந்திக்கும் அனுர

east tamil

பயிர் சேதத்திற்கு மாத இறுதியில் இழப்பீடு

east tamil

போயா தினத்தில் மதுபான விற்பனை – ஒருவர் கைது

east tamil

Leave a Comment