அசத்தல் அம்சங்களுடன் ஜிடி சீரிஸ் மாடல் அறிமுகம்

Date:

ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் ரியல்மி ஜிடி மற்றும் ரியல்மி ஜிடி மாஸ்டர் எடிஷன் என இரு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. அம்சங்களை பொருத்தவரை இரு மாடல்களிலும் 6.43 இன்ச் 2400×1080 பிக்சல் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், 2 எம்பி மேக்ரோ லென்ஸ் வழங்கப்பட்டு உள்ளது. ரியல்மி ஜிடி மாடலில் 16 எம்பி செல்பி கேமரா, ஜிடி மாஸ்டர் எடிஷன் மாடலில் 32 எம்பி செல்பி கேமரா உள்ளது.

ரியல்மி ஜிடி மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், ஜிடி மாஸ்டர் எடிஷன் மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. இரு மாடல்களிலும் டூயல் சிம் ஸ்லாட், 5ஜி, வைபை, ப்ளூடூத் அம்சங்கள் உள்ளன. இத்துடன் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது.

ரியல்மி ஜிடி மாடல் 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஜிடி மாஸ்டர் எடிஷன் மாடல் 4300 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கிறது. இரு மாடல்களிலும் 65 வாட் சூப்பர்டார்ட் பாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் ரியல்மி யு.ஐ. 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ் உள்ளது.

spot_imgspot_img

More like this
Related

நாடாளுமன்றத்தில் எனது இறுதிநாட்கள் இவை: ஊசி அர்ச்சுனா!

தனது அரசியல் எதிர்காலம் குறித்துப் பேசிய யாழ் மாவட்ட சுயேச்சை நாடாளுமன்ற...

ஹோமாகம தலைக்கவச தொழிற்சாலையில் தீ: 5 பேர் பலி

இன்று காலை (21), ஹோமாகம தொழிற்பேட்டையில் உள்ள தலைக்கவசத் தொழிற்சாலை ஒன்றில்...

அதிபர்களுக்கு அநீதி : கிழக்கு ஆளுநர் செயலகம் முன்னாள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடங்கியது!

கிழக்கு மாகாணத்தில் நீண்டகாலமாக கடமைநிறைவேற்று அதிபர்களாக பணியாற்றி வரும் கல்வியாளர்களுக்கு இழைக்கப்பட்டுவரும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்