26.5 C
Jaffna
February 7, 2025
Pagetamil
இலங்கை

மன்னாரில் 18 நாளில் 300 பேருக்கு தொற்று!

மன்னார் மாவட்டத்தில் கடந்த 18 நாட்களில் 300 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.

இன்று வியாழக்கிழமை மாலை (19) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மன்னார் மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி தொடக்கம் 18 ஆம் திகதி வரையான நாட்களில் 300 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் நேற்று புதன் கிழமை 11 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மாவட்டத்தில் இது வரை 13 கொரோனா மரணங்கள் நிகழ்ந்துள்ளது.இந்த வருடம் 1324 கொரோனா தொற்றாளர்களும் மாவட்டத்தில் தற்போது வரை மொத்தமாக 1341 கொரோனா தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தற்போது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. எனவே பொதுமக்கள் விழிப்புடன் சுகாதார நடை முறைகளை பின் பற்றிக்கொள்ள வேண்டும்.

குணம் குறிகள் எதுவும் காணப்பட்டால் அருகில் உள்ள வைத்தியசாலைக்கு சென்று தங்களை பரிசோதித்து கொள்வதற்கான வசதிகள் மன்னார் வைத்திய சாலைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது கொரோனா தொற்றாளர்கள் போதுமான அளவு இடவசதி உள்ள காரணத்தினால் வீடுகளில் தங்க வைத்து சுகாதார அதிகாரிகளின் கண்காணிப்பில் பராமரிக்கப்பட்டு வருகின்றமையினால் மக்கள் தமக்கு எதுவும் குணம் குறிகள் காணப்பட்டால் எவ்வித அச்சமும் இன்றி சுகாதார வைத்திய அதிகாரி அல்லது அருகில் உள்ள வைத்தியசாலையினையோ நாட முடியும்.

தற்போதைய சுகாதார வழிமுறைகளுக்கு அமைவாக எவ்வித ஒன்றுகூடலையும் நடத்த முடியாது என்பதால் மக்கள் ஒன்று கூடலினை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

பொலிஸார் அல்லது சுகாதார துறையினருக்கு தெரியாமல் இரகசியாமாக ஒன்று கூடுவதையும், நிகழ்வுகளை நடத்துவதையும் தவிர்த்துக் கொள்வது நல்லது.

பைஸர் தடுப்பூசியின் 2 ஆவது தடுப்பு ஊசியை இது வரை பெற்றுக் கொள்ளாதவர்கள் நாளை வெள்ளிக்கிழமை (20) மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை யில் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை 2 ஆவது தடுப்பு ஊசியை பெற்றுக்கொள்ள முடியும்.என அவர் மேலும் தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ரூ.11,000 இலஞ்சம் வாங்கிய தபால ஊழியருக்கு 28 வருட சிறை!

Pagetamil

காய்கறிகளின் விலை அதிகரிப்பு

east tamil

9 வருடங்களில் 3477 யானைகள் இறப்பு

east tamil

வீடெரிந்த எம்.பிக்களுக்கு ரணில் அள்ளிக்கொடுத்த தொகை!

Pagetamil

தமிழ்த்தேசிய அரசியலின் எதிர்காலம்

Pagetamil

Leave a Comment