இன்றைய நிலையில் எல்லோரும் நினைப்பது நாம் எப்போதும் எல்லோர் முன்னிலையிலும் சிறந்தவராகவே இருக்க வேண்டும் என்பது தான். ஆனால் இது சமயங்களில் உறவுகளில் சிக்கல்களை உண்டாக்கிவிடுகின்றன. நட்பு வட்டத்தில், காதல் புரியும் போது, கணவன் மனைவி உறவிலும் கூட. சிறந்தவர்களாக இருந்தால் தான் மற்றவர்களது அங்கீகாரம் கிடைக்கும் என்ற எண்ணமே பெரும்பாலான உறவு விரிசல்களுக்கு காரணமாகிவிடுகிறது.
ஈகோ அதிகமே காரணம்.
எந்த நேரத்திலும் அதிகமான சங்கடங்களை உணரும் போது அதை விட ஈகோ அதிக முக்கியத்துவம் பெறுகிறது. அப்போது மற்றவர்களிடமிருந்து தனித்திருப்பதை நீங்கள் உணர்கிறீர்கள் என்பதற்கான அறிகுறியாகும். ஏனெனில் ஒவ்வொருவரும் இணைந்திருப்பதன் மூலம் மகிழ்வான தருணத்தை எதிர்கொள்வீர்கள்.
ஆழ்மனதில் மறைந்திருக்கும் அச்சங்கள்
உங்கள் தன்மை மற்றும் ஆளுமை தொடர்பான அச்சங்கள் அதிகமாக இருக்கும். இந்த தன்மை எக்காரணம் கொண்டும் அவர்கள் அறிந்திருக்க கூடாது என்பதில் தீவிரமாக இருப்பீர்கள். இந்த பயங்கள் பெரும்பாலும் தகுதியவற்றராகவும், அன்பில்லாதவராகவும் உங்களுக்குள் உணர்த்தலாம். நீங்கள் உங்களுக்குள் காலியாக உணர்வீர்கள். உங்கள் சாதனைகளை தவிர்த்து ஈரக்க முடியாமல் திறமையற்றவராக இருப்பீர்கள். பெரும்பாலும் ஒவ்வொருவருமே அவர்கள் வழிநடத்தும் தன்மை குறித்த அச்சம் உள்ளது. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்கள் துணையுடன் அச்சங்கள் இல்லாமல் ஆழ்மனதில் இருக்கும் விஷயங்கள் குறித்தும் பேசுங்கள்.
குடும்ப விஷயங்கள் குறித்து பேச தயக்கம் கொள்வது
குடும்ப பிரச்சனைகள் பொதுவாக குழந்தைகளையும் பாதிக்க செய்கிறது. பல குடும்பங்களில் பெரியவர்கள் பிரச்சனை குழந்தைகளை பெருமளவு தனித்திருக்க வைத்திருக்கிறது. அவர்கள் பெரியவர்களை பிரிந்து தனித்து இருக்க விரும்புகிறார்கள். இந்த நிலையில் இருந்து விடுபட தெளிவான எல்லைகளை கொண்டு குடும்பத்தை பற்றி பேசுவது ஆரோக்கியத்தின் அறிகுறியாகும். இது உங்களை பற்றி குடும்பத்தில் இருப்பவர்களும் புரிந்து கொள்ள உதவும். உங்கள் குடும்ப பிரச்சனைகள் தவிர உங்கள் மறைவில் இருக்க கூடிய சில இரகசியங்களையும் நீங்கள் வெளிப்படுத்தலாம்.
எதிர்காலத்துக்கான இரகசிய கனவுகள்
உங்கள் குறிக்கோள்களையும் கனவுகளையும் பகிர்வது மிகவும் உணர்திறன் மிக்க செயலாகும். ஏனெனில் மற்றவர்கள் உங்கள் மீது 100% குறைவான ஆதரவும் நம்பிக்கையும் கொண்டால் அது உங்களை சந்தேகிக்க செய்யும். அதே நேரம் உங்களை சந்தேகிக்காவிட்டாலும் அவர்களுடைய பொறுமை. நம்பிக்கை மற்றும் ஆதரவு இல்லாமை அவர்கள் உங்களுக்காக இல்லை என்னும் கடினமான யதார்த்தத்தையும் சந்திக்க நேரிடும். ஆனால் உண்மையை அறிய நீங்கள் அதை செய்ய வேண்டும். இல்லையெனில் நீங்கள் பிரிந்து செல்லவும் நேரிடலாம். அதே நேரம் உங்கள் துணை உங்களுடன் இருப்பதோடு குறிக்கோள்கள் மற்றும் கனவுகளுடன் ஒரே பக்கத்தில் இருப்பதன் மூலம் நீங்கள் இருவருமே ஒத்த எண்ணம் கொண்டவர்களாக இருந்தால் உங்கள் உறவு வ்லுவடைவதை பார்க்கலாம்.
நிதி சிக்கல்கள்
உங்கள் நிதி நிலை தனிப்பட்டது என்றாலும் துணையுடன் பகிரும் போது சில முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்க வேண்டும். வாழ்க்கை முறை பயணம் மற்றும் எந்த நிதி சுமைகளும் தவிர்க்க முடியாமல் உங்கள் துணையும் புரிந்துகொள்வார்கள். இது ஒரு போராட்டமல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை மிகப்பெரிய விஷயமல்ல. இது சங்கடப்படக்கூடியதாக இருக்கலாம். ஆனால் இதை நீங்கள் மாற்ற முயற்சிக்கலாம்.
வழக்கத்துக்கு மாறான பாலியல் கற்பனைகள்
பாலியல் வாழ்க்கையை பொறுத்தவரை உங்கள் கற்பனையை உங்கள் துணையுடன் பகிரும் போது அது இருவருக்குமே அதிக அன்பையும் நெருக்கத்தையும் கொடுக்கும். அதோடு அவர் உங்களை உண்மையாக நேசிக்கும் போது நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க அவர் விரும்புவது உங்களுக்கு இன்னும் மகிழ்வை அளிக்கும். உங்கள் பாலியல் கற்பனைகளை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று விதி இல்லை. ஆனால் இதை நீங்கள் செய்தால் இருவருக்கும் இடையே புது அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலர் தங்கள் கற்பனையை துணையிடம் பகிர தயங்குகிறார்கள். இது குறித்து கவலைப்பட ஒன்றுமே இல்லை. உங்கள் எண்ணங்கள் அல்லது செயல்களை கட்டுப்படுத்த முடியாமல் போவதை காட்டிலும் இதை நீங்கள் பகிர்வது நல்லது.
இப்படி ஒளிவு மறைவில்லாத பாலியல் கற்பனை உங்கள் இருவருக்கும் பிடித்தமானதாக இருந்தால் நீங்கள் உண்மையில் மற்றவர்களிடமிருந்தும் அவர்களின் கற்பனைத்திறனிலிருந்தும் வேறுபட்டவர் அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும் இது சங்கடமான உறவு பிரச்சனையை தீர்க்க உதவும். குறிப்பாக மோசமான விஷயங்களை பகிரும் போது இந்த பாலியல் விளையாட்டு நேரம் சமாதானத்துக்கு உதவும்.