25.4 C
Jaffna
December 27, 2024
Pagetamil
லைவ் ஸ்டைல்

சாதாரண சருமம் உள்ளவர்களுக்கான சில நேச்சுரல் ஃபேஸ் வொஷ்!

சருமத்தை சுத்தம் செய்வது அன்றாடம் செய்யும் செயல்களில் இன்றியமையாதது. அப்படி சுத்தம் செய்யும் போது சாதாரணமாக முகத்தை மட்டும் தான் கழுவுவோம்.இல்லையெனில் சோப்பு அல்லது ஃபேஷ் வாஷ் பயன்படுத்தி கழுவுவோம். ஆனால் அப்படி கழுவுவது அனைவருக்கும் ஏற்றதாக இருக்காது. காரணமாக சருமத்தில் பல வகைகள் உள்ளன. அதில் மிகவும் தொல்லை தரக்கூடிய சருமம் தான் எண்ணெய் பசய் சருமம் மற்றும் வறட்சியான சருமம்.

இத்தகைய சருமத்தினருக்காக கடைகளில் பல அழகு சாதன பொருட்கள் விற்கப்படுகின்றன. ஆனால் சாதாரண சருமம் உள்ளவர்களுக்காக என்று எதுவும் விற்பதில்லை. இதனால் சாதாரண சருமம் உள்ளவர்கள், எதை பயன்படுத்துவது என்று தெரியாமல், மற்ற சருமத்தினருக்காக தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்கிப் பயன்படுத்துகின்றனர்.

தயிர் ஃபேஸ் வாஷ்

சாதாரண சருமம் உள்ளவர்களுக்கு தயிர் மிகவும் சிறந்த பொருள். எனவே அந்த தயிரை சருமத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவினால், சரும மென்மையாகவும், சுத்தமாகவும் இருக்கும்.

தயிர் மற்றும் தேன்

2 டீஸ்பூன் தயிர் மற்றும் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, சருமத்தில் தடவ வேண்டும். குறிப்பாக அப்படி தடவும் போது, வட்ட முறையில் தேய்த்து 2-3 நிமிடம் மசாஜ் செய்து, பின் சிறிது நேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

முட்டை மற்றும் தேன்

முட்டை மற்றும் தேன்
நார்மல் சருமம் உள்ளவர்கள், முட்டையின் மஞ்சள் கருவுடன், 1 டீஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து, வேண்டுமானால் அத்துடன் சிறிது பாதாம் பேஸ்ட் சேர்த்து, பின் அதனை முகத்தில் தடவி வட்ட வடிவில் மசாஜ் செய்து, பின் 10 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவினால், சருமம் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

ஆப்பிள் மற்றும் கிரீம்

ஒரு ஆப்பிளை எடுத்து வேக வைத்து, பின் அதை நன்கு மசித்து, 1 டீஸ்பூன் க்ரீம், 1 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் மற்றும் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு பேஸ்ட் செய்து, பின் அதை முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் கழுவினால், சருமத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறி, சருமம் பொலிவோடு இருக்கும்

களிமண்

சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் நச்சுக்களை முற்றிலும் வெளியேற்ற வேண்டுமானால், களிமண்ணை பயன்படுத்த வேண்டும். அதற்கு களிமண்ணை நீர் சேர்த்து கலந்து, வேண்டுமானால் அதில் ஆஸ்பிரின் மாத்திரையை பொடி செய்து சேர்த்து கலந்து கொள்ளுங்கள், சருமத்தில் தடவி நன்கு உலர வைத்து கழுவினால், சருமம் பொலிவுடன் இருப்பதை நன்கு உணரலாம்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வரும் காதலர் தினத்தில் உங்கள் காதலை முன்மொழிய வெற்றிகரமான சூத்திரம் இதுதான்!

Pagetamil

கோழி இறைச்சியை சமைப்பதற்கு முன் கழுவக்கூடாதா?

Pagetamil

பருவமடைந்த, பிரசவித்த பெண்களுக்கான பிரத்யேக உணவுகள்!

Pagetamil

கணவாய் வறுவல்

Pagetamil

வெங்காயத் தாளில் 10 விதமான ரெசிப்பி!

Pagetamil

Leave a Comment