கிளிநொச்சி மாவட்டம் அக்கராயன்குளம் 50 வீட்டுத்திட்டம் பகுதியில் சினைப்பர் துப்பாக்கி ஒன்றின் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன.
அந்தப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் இணைந்து அங்கு காணப்படுகின்ற பொதுக் கிணறு ஒன்றினை நேற்று (18) மாலை சீரமைத்துள்ளனர்.
இதன்போது துப்பாக்கியின் தொலைநோக்கி பாகங்கள் காணப்பட்டிருக்கின்றன.
சம்பவம் தொடர்பில் அக்கராயன்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
துப்பாக்கி தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டிருக்கின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1