நியூசிலந்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது.
நேற்று (18) புதிதாக 3 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். அடையாளம் காணப்பட்டவர்களில் 9 பேர், சமூகப் பரவலால் தொற்றிற்குள்ளானதாக அந்நாட்டுச் சுகாதார அமைச்சு தெரிவித்தது.
அவற்றில் குறைந்தது மூன்று சம்பவங்களுக்கு, அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் தற்போது பரவி வரும் வைரஸ் தொற்றுடன் தொடர்பிருப்பதாக, நியூசிலந்துப் பிரதமர் ஜசிண்டா ஆர்டன் கூறினார்.
வைரஸ் எவ்வாறு எல்லை கடந்து வந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை.
நியூசிலந்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை, அடுத்த சில நாள்களில் அதிகரிக்கலாம் என எதிர்பார்ப்பதாகப் பிரதமர் ஆர்டன் தெரிவித்தார்.
தொற்றிற்குள்ளான சிலர் பாடசாலை, தேவாலயம் போன்ற பொது இடங்களுக்குச் சென்றிருந்தது அதற்குக் காரணம்.
தற்போது, நியூசிலந்தில் 3 நாள் முடக்கநிலை நடப்பில் உள்ளது.