பெண் டிக்ரொக் பிரபலத்திற்கு நேர்ந்த கொடூரம்; ஆடைகளை கிழித்தெறிந்து, தூக்கியெறிந்து விளையாடிய கும்பல் (VIDEO)

Date:

பாகிஸ்தானில் பெண் டிக்டொக் பிரபலத்தின் ஆடையை கிழித்து, அந்தரத்தில் வீசி விளையாடிய கும்பலின் நடத்தையை பார்த்து பாகிஸ்தான் அதிர்ந்து போயுள்ளது. கிட்டத்தட்ட 400 பேர் அடங்கிய அந்த கும்பலிற்கு எதிராக கடுமையான நடவடிக்கையெடுக்க வேண்டுமென நாடு முழுவதும் கோரிக்கை வலுத்து வருகிறது.

பாகிஸ்தானை சேர்ந்த பெண் டிக்டொக் பிரபலம் ஆயிஷா. அவருக்கு ஏராளமாக பின்தொடர்பவர்கள் உள்ளனர்.

கடந்த 14 ஆம் திகதி பாகிஸ்தான் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. அந்தக் கொண்டாட்டத்தைப் படம்பிடிப்பதற்காக, தனது நண்பர்கள் 6 பேருடன் மினார் -இ -பாகிஸ்தான் என்ற பகுதிக்கு சென்றுகொண்டிருந்தார்.

லாகூரின் இக்பால் பார்க் அருகே வந்தபோது, ஏராளமானவர்கள் அவரை சூழ்ந்து கொண்டனர். அவர்களிடமிருந்து தப்பிக்க ஆயிஷா முயன்றார். எனினும், அந்த கும்பலிடம் அவர் சிக்கினார்.

ஒரு விளையாட்டு பொம்மையை போல, அவரது உடைகளை கிழித்தனர். அவரை அங்கும் இங்குமாகத் தள்ளினர். தரதரவென இழுத்தனர். மேலே தூக்கி வீசி விளையாடினர். அவர் கதறினாலும் அந்த கும்பல் இரங்கவில்லை. அடித்து துன்புறுத்தினர்.

இதை சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இது வைரலானதை அடுத்து பலர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தான் அரசியல்வாதிகள் மற்றும் பிரபலங்கள் கண்டித்துள்ளனர்.

https://twitter.com/i/status/1427798132985896961

இந்நிலையில் ஆயிஷா நேற்று லாகூர் லாரிஅட்டா பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் 400 பேர் கொண்ட கும்பல் தன்னையும் தன் நண்பர்களையும் கடுமையாகத் தாக்கிய தாகவும், உடைகளை கிழித்து இழுத்துச் சென்றதாகவும், அணிந்திருந்த நகைகளையும் நண்பரின் செல்போன், ரூ15 ஆயிரத்தை பறித்துக் கொண்டதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.

https://twitter.com/i/status/1427856661646086146

அந்த வீடியோ, அந்த பகுதியிலிருந்த சிசிரிவி கமராக்களின் உதவியுடன் கும்பலில் இருப்பவர்களை பொலிசார் அடைளாளம் காண முயன்று வருகிறார்கள்.

அந்த கும்பலில் இருப்பவர்களின் புகைப்படங்களை இயன்றவரை அடையாளம் கண்டு, பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து, அடையாளம் காட்டி வருகிறார்கள்.

இந்த சம்பவம் பாகிஸ்தான் முழுவதிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

பல்கலை, உயர்கல்வி நிறுவனங்களில் விடுதி வசதிகளை விரிவுபடுத்த திட்டம்

இன்று (08) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, 2026...

பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலத்திற்கு எதிராக மனு!

அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி...

மதுபானசாலைகளற்ற வலி வடக்கில் மதுபானசாலைக்கு அனுமதியா?” — வீதியில் இறங்கிய மக்கள்

மதுபானசாலைகளற்ற பிரதேசமாக காணப்படும் வலி வடக்கில் புதிய மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்படுவதற்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்