குக் வித் கோமாளி பிரபலங்கள் எல்லோரும் தற்போது சினிமாவில் பிசியாகைவிட்டனர். சிவாங்கியும் சிவகார்த்திகேயனின் டான் உள்ளிட்ட படங்களில் தற்போது நடத்த வருகிறார்.
எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் சிவாங்கி சமீபத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் கூறி இருக்கிறார். அப்போது ஒருவர் அவரது திருமணம் பற்றி கேட்டிருக்கிறார்.
எப்போது திருமணம் செய்ய போகிறீர்கள் என கேட்டதற்கு ‘எட்டு வருடங்களுக்கு பிறகு’ என பதில் கூறி உள்ளார் சிவாங்கி.
குக் வித் கோமாளியில் சிவாங்கி அஸ்வின் உடன் மிகவும் நெருக்கமாக இருப்பது போல இருந்ததால் அவர்கள் காதலிக்கிறார்களா என்று கூட நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினார்கள். ஆனால் அது நட்பு மட்டும்தான் என அவர்களே விளக்கம் கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.