ஆப்கானின் தேசியக்கொடி எது?: தலிபான் கொடியை ஏற்க மறுத்து நாடு முழுவதும் போராட்டம்; தலிபான்கள் துப்பாக்கிச்சூடு!

Date:

ஆப்கானிஸ்தானின் கொடியை பறக்கச் செய்தய வலியுறுத்தி பல்லாயிரக்கணக்கான மக்கள் நங்கர்ஹார் மாகாணத்தின் கிழக்கு ஜலாலாபாத் நகரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டக்காரர்கள் மீது தலிபான்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர் என்று நேரில் பார்த்தவர்கள் கூறினர்.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை தொடர்ந்து, அந்த நாட்டின் தேசியக்கொடியில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் கருப்பு, சிவப்பு, பச்சை நிற கொடியை தொடர்ந்து பேணுமாறு பெரும்பாலான மக்கள் வலியுறுத்துகிறார்கள்.

எனினும், தமது கொடியின் வெள்ளை நிறத்தில் புதிய கொடியை அறிமுகப்படுத்த தலிபான்கள் விரும்புகிறார்கள்.

போராட்டத் தகவல்களை அறிக்கையிட வந்த இரண்டு பத்திரிகையாளர்களையும் தலிபான்கள் தாக்கியதாக ஜலாலாபாத் நகரில் உள்ள உள்ளூர்வாசிகள் கூறினர்.

தேசியக்கொடியை மாற்ற வேண்டாமென வலியுறுத்தி, பாகிஸ்தானின் எல்லையிலுள்ள குனார் மாகாணத்தில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குனார் மாகாணத்தின் அசதாபாத் நகரத்திலிருந்து மாகாண தலைநகரில் மினாரை நோக்கி சென்ற போராட்டக்காரர்கள் ஆப்கான கொடியை ஏந்திச் சென்றனர்.

https://twitter.com/i/status/1427953944949579788

தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில், கோஸ்ட் மாகாணத்திலும் இதேபோன்ற போராட்டம் இடம்பெற்றது. அது வன்முறையாக மாறியது . அங்கும் தலிபான்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். ஆனால் உயிர் சேதம் எதுவும் இல்லை.

spot_imgspot_img

More like this
Related

முச்சக்கர வண்டியின் மீது மரம் விழுந்து 3 பேர் பலி

நாவலப்பிட்டியிலிருந்து மப்பகந்த பகுதிக்குச் சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டி மீது யூக்கலிப்டஸ்...

இலங்கை முழுவதும் முறையான பதிவுகளின்றி 300 முதியோர் இல்லங்கள் இயங்குகின்றன!

நாட்டில் 300க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் இருப்பது உறுதி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்