25.3 C
Jaffna
January 15, 2025
Pagetamil
இலங்கை

‘எல்லாம் நன்மைக்கே’: குட்டிக்கதை சொல்லி விடைபெற்ற பவித்ரா!

அiமச்சரவை மாற்றம் குறித்து இறுதிவரை தான் அறிந்திருக்கவில்லை, என தெரிவித்துள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, இவ்வாறானதொரு மாற்றம் ஏற்படுமென தான் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. எல்லாம் நன்மைக்கே என மனதை தேற்றிக் கொண்டுள்ளார்.

நேற்று (16) அமைச்சரவை மாற்றத்தின் பின்னர், சுகாதார அமைச்சுக்குச் சென்று
அங்கிருந்தவர்களுக்கு நன்றிகூறி, விடைபெற்றார். அதன்பின்னர் உரையாற்றும் போதே
மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்பாராத தருணத்தில் மாற்றம் செய்யப்பட்டு தனக்கு இந்த அமைச்சு வழங்கப்பட்டுள்ளது. நான் ஜனாதிபத செயலகத்திற்கு  செல்லும் வரை எனது அமைச்சுப் பதவியில் மாற்றம் வரும் என தான் அறிந்திருக்கவில்லை.

எது எப்படியாயினும் வாழ்க்கையில் அனைத்தையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.

இதனைத் தொடர்ந்து கதையொன்றைக் கூறினார். அந்த கதை வருமாறு-

“அரசனும் அவனது ஆலோசகரும் காட்டுவழியாக பயணம் செய்துகொண்டிருந்தனர். அப்போது அரசன் எய்த மூன்று அம்புகள் குறி தவறிவிட்டன. அதன்போது, என்றுமில்லாத வகையில் குறி தவறிவிட்டனவே ஏன் எனக் அரசன் கேட்கையில், எல்லாம் நன்மைக்கே என ஆலோசகர் பதிலளித்துள்ளார். பயணமும் தொடர்ந்தது.

அரசன், திடீரென தன்னுடைய வாளை உருவியுள்ளார். அப்போது, தவறுதலாக அரசனின் விரலில் பட்டுள்ளது. அதனால், விரலில் ஒருதுண்டு கீழே விழுந்துவிட்டது. இதுபற்றியும் ஆலோசகரிடம் அரசன் வினவியுள்ளார். அப்போதும் எல்லாம் நன்மைக்கே என, ஆலோசகர் பதிலளித்துள்ளார்.

கடுமையாக கோபம் கொண்ட அரசன், அந்த ஆலோசகரை, அங்கிருந்த பாரிய குழிக்குள்
தள்ளிவிட்டு, தனது பயணப்பாதையை மாற்றிக்கொண்டு பயணித்துள்ளார்.

போய்கொண்டிருந்தபோது பலிபூஜைக்காக கூடியிருந்தவர்களிடம் அரசன் சிக்கி விட்டார். அவர்கள் பலி கொடுக்க ஒருவரை தேடிக்கொண்டிருந்தனர்.

அரசன் அவர்களிடம் வசமாகக் மாட்டிக்கொண்டார். அரசனை முழுமையாக நீராட்டி
எடுத்துவந்தவர்கள், அங்கங்களை பரிசோதனை செய்துள்ளனர். பலி பூஜைக்கு முழுமையாக உடலமைப்பை கொண்டவர்களை மட்டுமே பயன்படுத்துவர். ஊனம் உள்ளவரை பலியெடுக்க மாட்டார்கள்.

அரசனின் விரல்களில் ஒரு துண்டு இன்மையால், பலி பூஜைக்கு அரசனை பயன்படுத்தாது விட்டுவிட்டனர். ஆச்சரியமடைந்த அரசன், அங்கிருந்தவர்களிடம் விசாரித்துள்ளார்.

ஊனம் உள்ளவர்களை பலியெடுக்கமாட்டோம் என விளக்கமளித்துள்ளனர். அப்போதுதான், எல்லாம் நன்மைக்கே என ஆலோகர் கூறியது அரசனுக்கு ஞாபகத்துக்கு வந்தது. அதன்பின்னர், அந்த குழியைத் தேடிச்சென்று, அதிலிருந்து ஆலோசகரை மீட்டெடுத்தார் அரசன்.

குழியிலிருந்து வெளியேவந்த ஆலோசகர், என்னை குழிக்குள் நீங்கள் தள்ளியதும் நன்மைக்கே என்றார். அரசனுக்கு மீண்டும் அதிர்ச்சி. ஏன் என வினவியுள்ளார். நானும் உங்களுடன் வந்திருந்தால், அந்த பலி பூஜையில் உங்களுக்கு அடுத்தப்படியாக என்னை
பலியெடுத்திருப்பார்கள், நான் தப்பிக்கொண்டேன் என ஆலோசகர் விளக்கப்படுத்தியுள்ளார் என அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, கதையை முடித்தார்.

எனவே, தனக்கு வழங்கப்பட்ட இந்த பதவி மாற்றமும் நன்மைக்கே எனக் கூறி சிரித்த அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, ஆனால் மனதில் சிறிய கவலையுள்ளது என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘இளம் பெண்களை நிர்வாணமாக்கி….’- வெளிநாட்டு வேலைக்கு சென்று திரும்பிய தமிழ் பெண் வெளியிட்ட அதிர்ச்சிக் கதைகள்!

Pagetamil

அனுரவிற்கு மக்கள் வாக்களித்தது ஊழல், மோசடியை சுத்தம் செய்யவே தவிர வாகன உதிரிப்பாகங்களை கழற்ற அல்ல!

Pagetamil

ஜனநாயக போராளிகள் கட்சியின் இளைஞர் அணியின் பொங்கல் நிகழ்வு

east tamil

இரத்தினக் கற்களை கடத்த முயன்ற சீன தந்தை, மகன் கைது

east tamil

சீன ஜனாதிபதியை சந்திக்கும் அனுர

east tamil

Leave a Comment