ஆப்கானிஸ்தானில் உள்ள காபூல் விமான நிலையத்தில் அமெரிக்க இராணுவத்தின் வெளியேற்ற நடவடிக்கைகளில் தலையிட வேண்டாம் என்பதை வலியுறுத்துவதற்காக அமெரிக்காவின் மத்திய கட்டளைத் தளபதி, மூத்த தலிபான் தலைவர்களை நேருக்கு நேர் சந்தித்து பேசியதாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கத்தாரின் தோஹாவில் ஞாயிற்றுக்கிழமை நடந்த கூட்டத்தில், ஜெனரல் பிராங்க் மெக்கென்சியும், தலிபான் மூத்த தலைவர்களும் சந்தித்து காபூல் விமான நிலையத்தில் ஒரு “செயலிழப்பு பொறிமுறையை” நிறுவினார் – இந்த ஏற்பாட்டின் மூலம், நாட்டின் புதிய ஆட்சியாளர்களின் தலையீடு இல்லாமல் விமான நிலையத்தில் வெளியேற்றும் நடவடிக்கைகளை அமெரிக்கா தொடரும்.
அமெரிக்காவின் வெளியேற்றும் நடவடிக்கையில் தலையிடக் கூடாது என்பதை ஜெனரல் மெக்கன்சி, தலிபான்களிடம் வலியுறுத்தியுள்ளார். தேவைப்பட்டால் விமான நிலையத்தை பாதுகாக்க அமெரிக்க இராணுவம் பலமாக பதிலளிக்கும் என்றார்.