29.3 C
Jaffna
March 29, 2024
கிழக்கு

மரக் கடத்தலில் ஈடுபட்டு வந்தவர்கள் மடக்கிப் பிடிப்பு!

திருகோணமலை-கந்தளாய் காட்டுப் பகுதியில் நீண்டகாலமாக மரக்கடத்தலில் ஈடுபட்டுவந்த சந்தேக நபர்களை திருகோணமலை வனவிலங்கு மற்றும் சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று (15) கைது செய்துள்ளனர்.

கந்தளாய் காப்புக்காடு பகுதியில் உள்ள அரச தேக்கு தோட்டங்களில் இருந்து வெட்டப்பட்ட மரங்கள் இதன்போது கைப்பற்றப்பட்டது.

இம்மரங்கள் மாட்டு வண்டிகள் மற்றும் படகுகள் மூலம் கிண்ணியாவிற்கு கொண்டு செல்லப்படுவது தெரியவந்ததை அடுத்தே இச்சுற்றி வளைப்பு இடம்பெற்றுள்ளது.

இதன் போது ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டதோடு கால்நடைகள் அடங்கிய நான்கு வண்டிகளும் வனவிலங்கு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன.

திருகோணமலை வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரி தலைமையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

-அப்துல்சலாம் யாசீம்-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கல்முனை அநீதிக்கு எதிராக 5வது நாளாக போராட்டம்!

Pagetamil

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: 3வது நாளாக கடும் மழைக்கு மத்தியில் போராட்டம்

Pagetamil

மருதமுனை மதரஸாவில் கொடூரம்!

Pagetamil

கல்முனையில் தமிழர்களுக்கு எதிரான அநீதி: மீண்டும் வெடித்தது போராட்டம்!

Pagetamil

ஆற்றில் குதித்த திருடன்: ட்ரோன் உதவியுடன் தேடுதல்!

Pagetamil

Leave a Comment