இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கப்டன் குசல் ஜனித் பெரேராவுக்கு கோவிட்-19 வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் தலைமை நிர்வாக அதிகாரி ஆஷ்லே டி சில்வா தெரிவித்தார்.
குசல் ஜனித் தனது காயங்களிலிருந்து மீண்டு, பயிற்சியை மீண்டும் தொடங்குவதற்காக பிசிஆர் சோதனை மேற்கொண்டார். இதன்போது, தொற்று இருப்பது உறுதியானது.
அடுத்த மாதம் தொடக்கத்தில் தென்னாபிரிக்காவுக்கு எதிரான இலங்கை அணியில் குசல் ஜனித் பெரேரா இடம்பெற வாய்ப்பில்லை