பணிப்பெண்ணை துஷ்பிரயோகம் செய்த ரிஷாத்தின் மச்சானிற்கு பிணை!

Date:

பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியூதீனின் மனைவியின் சகோதருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டில் ரிஷாத் பதியூதீனின் இல்லத்தில் பணிபுரிந்த ஒரு பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் கீழ் அவரை பொலிஸார் கைதுசெய்திருந்தனர்.

இந் நிலையில் சந்தேக நபரை 500,000 ரூபா பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் இன்றைய தினம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதேவேளை சந்தேக நபருக்கு நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், அவரது கடவுச்சீட்டையும் பறிமுதல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பதவியேற்பு விழாவில் தமிழை 3ஆம் இடத்திற்கு தள்ளிய விஜய்!

தமிழக முதல்வராக இன்று தவெக தலைவர் விஜய் பதவியேற்ற நிகழ்ச்சியில், தமிழ்த்...

“நீண்டகால கூட்டணி கட்சியான திமுகவுக்கே துரோகம் இழைத்த ஒட்டுண்ணிக் கட்சி காங்கிரஸ்” – பிரதமர் மோடி

துரோகம் இழைக்க மட்டுமே காங்கிரஸ் கட்சிக்குத் தெரியும் என்றும், தனது நீண்டகால...

தமிழக முதல்வராக பதவியேற்றார் ஜோசப் விஜய்!

தமிழக முதல்வராக பதவியேற்றார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய். சென்னை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்