ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலையின் பிரதம மருத்துவர் யோ.யதுநந்தனன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க அவ் வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சை பிரிவிற்கு ரூபாய் 75000 பெறுமதிமிக்க அத்தியாவசிய பொருட்கள் (இவ் இடர் காலத்தில் தட்டுப்பாடாக கிடைக்கும் பல பாவனை பொருட்கள் அடங்கலாக) நோயாளிகள் மற்றும் பணியாளர்கள் பயன் பெறும் வகையில் சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின் ( சூழகம் ) செயலாளர் திரு. கருணாகரன் நாவலன் அவர்களின் ஏற்பாட்டில் வழங்கிவைக்கப்பட்டன .
புங்குடுதீவு பத்தாம் வட்டாரத்தினை சேர்ந்தவரும் கனடாவினை வதிவிடமாகவும் கொண்டிருந்தவருமான அமரர் திருமதி செல்லமுத்து குணரெட்ணம் அவர்களின் நினைவாக அவரது குடும்பத்தினரின் ரூபாய் 50000 நிதியுதவி மூலமும் , சூழகம் அமைப்பின் செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின் ரூபாய் 25000 நிதியுதவி ஊடாகவும் இச்செயற்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது . ஓய்வுபெற்ற கிராமசேவகர் திரு .சோம சச்சிதானந்தன் அவர்கள் மேற்படி நிதியுதவியினை உடனடியாக கனடாவிலிருந்து பெற்றுக்கொள்வதற்கு ஆதரவு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது .
இச்செயற்பாட்டில் ஊர்காவற்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் சூழகம் அமைப்பின் நிர்வாக குழு உறுப்பினர்களான கருணாகரன் குணாளன் , ராகுலன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர் .