25.3 C
Jaffna
December 19, 2024
Pagetamil
இலங்கை

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த தாயாரை ஏற்க மறுக்கும் மகள்: 1 வருடமாக வைத்தியசாலையில் தங்கியுள்ள மூதாட்டி!

கொரோனா தொற்றிற்குள்ளான மூதாட்டியொருவர், அதிலிருந்து குணமடைந்த பின்னரும் வீடு திரும்ப முடியாத நிலையில் உள்ளார்.சுமார் ஒரு வருடமாக  வைத்தியசாலையில் அவர் தங்கியுள்ளதா செய்தி வெளியாகியுள்ளது.

அவரது மகள் ஏற்றுக்கொள்ள மறுப்பதால், மூதாட்டி போக்கிடமின்றி வைத்தியசாலையிலேயே தங்கியுள்ளார்.

மினுவாங்கொடவை சேர்ந்த மூதாட்டிக்கே இந்த கதி நேர்ந்துள்ளது. அவர் கொரோனா தொற்றிற்குள்ளானதையடுத்து கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அவர் குணமடைந்த பின்னரும், அவரது ஒரே மகள் ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளார்.

தனது மகள் வீடு கட்ட நான்கரை இலட்சம் ரூபா பணம் தான் வழங்கியதாகவும், தற்போது தன்னிடம் பணமும், பொருட்களும், தங்குமிடமும் இல்லையென அவர் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழில் எலிக்காய்ச்சலால் 110 பேர் பாதிப்பு!

Pagetamil

நகைச்சுவையாளர்களால் நிரம்பிய இலங்கை நாடாளுமன்றம் – முன்னாள் ஆளுநர்

east tamil

சாவகச்சேரி வைத்தியசாலை மேம்பாடு தொடர்பான கலந்துரையாடல்

Pagetamil

நாடாளுமன்றத்துக்குள்ளும் நாகரிகமில்லாமல் பேச்சு… அர்ச்சுனாவின் வேட்டியை உரிந்த ஜேவிபி!

Pagetamil

2028இற்குள் அரசின் நோக்கம்

east tamil

Leave a Comment