நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்கள் கூறிய மு. க.ஸ்டாலின்

Date:

இந்திய நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள ஒன்று:

நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த சுதந்திர தின வாழ்த்துக்களைக் குறிப்பிடுகிறேன்.

தங்கள் வியர்வையையும், ரத்தத்தையும் சிந்தி இரவு பகலாகப் போராடிய சுதந்திரப் போராட்ட வீர்களுக்கும், தியாகிகளுக்கும் இந்த நாளில் நாம் அனைவரும் இருகரம் கூப்பி வணக்கம் செலுத்தி – நன்றிக் காணிக்கை செலுத்த வேண்டிய மிக முக்கியமான கடமையில் இருக்கிறோம்.

சுதந்திரப் போராட்ட தியாகிகளின் தியாகம் இன்றைக்கு ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் நெஞ்சத்திலும் குடிகொண்டிருக்கிறது.

ஆயுதமின்றி – அறவழி ஒன்றையே தங்களின் தொய்வில்லா போராட்டமாக நடத்திக்காட்டி இந்தியாவிற்கு ஜனநாயகக் காற்றை சுவாசிக்க கிடைத்த சுதந்திரம் என்றென்றும் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டிய அரியதொரு கருவூலம்.

தமிழ்நாடும், இந்தியத் திருநாடும் எல்லாத் திக்குகளிலும் புகழ் பெற்றிடப் பாடுபடுவோம் – அயராது உழைத்திடுவோம் என்று 75 -வது சுதந்திர தினத்தில் அனைவரும் சபதமேற்போம். வெற்றி பெறுவோம் என கூறியுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

செயற்கை நுண்ணறிவு உதவியுடன் புதிய தடுப்பூசி கண்டுபிடிப்பு – பெருந்தொற்றுகளைத் தடுப்பதில் முக்கிய முன்னேற்றம்

எதிர்காலத்தில் உலகை அச்சுறுத்தக்கூடிய புதிய வைரஸ்கள் மற்றும் பெருந்தொற்றுகளில் இருந்து மனிதகுலத்தைப்...

குரு-சந்திர சேர்க்கையால் உருவான சமசப்தக் யோகம்: இந்த 4 ராசிக்காரர்களுக்கு வெற்றியும் செல்வமும் குவியுமா?

ஜூன் மாதத்தின் தொடக்கத்தில் ஜோதிட ரீதியாக பல சுப யோகங்கள் உருவாகி...

முச்சக்கர வண்டியின் மீது மரம் விழுந்து 3 பேர் பலி

நாவலப்பிட்டியிலிருந்து மப்பகந்த பகுதிக்குச் சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டி மீது யூக்கலிப்டஸ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்