உருகொடவத்த பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக மூத்த டிஐஜி அஜித் ரோஹன தெரிவித்தார்.
சந்தேக நபர்களிடமிருந்து போலி 100 ரூபா நாணயத்தாள் 25, 500 ரூபா நாணயத்தாள் 18, 1000 ரூபா நாணயத்தாள் ஒன்று மீட்கப்பட்டன.
போலி நாணயத்தாள்களை அச்சிட பயன்படுத்திய பிரிண்டர், மடிக்கணினி மற்றும் இதர உபகரணங்களையும் பொலிசார் கைப்பற்றினர்.
கிராண்ட்பாஸ் பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
What’s your Reaction?
+1
+1
1
+1
+1
+1
+1
+1