கைதான மீரா மிதுனுக்கு ஆகஸ்ட் 27ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது

Date:

பட்டியலின சமூகத்தவரை அவதூறாக பேசிய வழக்கில் கைதான நடிகை மீரா மிதுனுக்கு ஆகஸ்ட் 27 ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

பட்டியலின சமூகத்தினரைப் பற்றி சமூக வலைதளங்களில்நடிகை மீரா மிதுன் இழிவாகப் பேசிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர் மீது மத்திய குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. பின்னர் கேரளாவில் பதுங்கி இருந்த மீரா மிதுனை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

இதனையடுத்து கேரளாவில் இருந்து மீரா மிதுன் தனி வேன் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டார். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

ஆனால் போலீசார் விசாரணைக்கு அவர் ஒத்துழைக்கவில்லை என கூறப்பட்டது.இந்நிலையில் அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு மீரா மிதுன் சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி அவருக்கு ஆகஸ்ட் 27 ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டார்.

spot_imgspot_img

More like this
Related

கொழும்பு தேசிய வைத்தியசாலை இயல்புக்கு திரும்பியது!

கொழும்பு தேசிய மருத்துவமனையில், பலத்த மழையினால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கின் காரணமாகச்...

முன்னாள் காதலி இப்போது என்ன செய்கிறாள்? – தகவல் அறியும் சட்டத்தில் 1,886 கேள்விகள் கேட்ட இளைஞர்

விழுப்புரம் மாவட்​டத்​தைச் சேர்ந்த சந்​தோஷ் (22) என்​பவர், கடந்த 2021-2024 ஆண்​டுகளில்...

பட்டினியால் இறந்து சொர்க்கம் செல்லலாமென கூறி 190 பேரை கொன்ற மதகுருவுக்கு 200 வருட சிறை

கென்யாவின் ஷாகஹோலா வனப்பகுதியில் பட்டினி கிடந்து உயிரிழக்கத் தூண்டிய மதக் குழுவின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்