Pagetamil
இலங்கை

கிளிநொச்சியில் கிணற்றில் மிதக்கும் சடலம்!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரத்தினபுரத்தில் கிணற்றுக்குள் காணப்படும் சடலம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட இரத்தினபுரம் பகுதியில் பராமரிப்பின்றிய கிணறு ஒன்றில் ஆண் ஒருவருடையது எனச் சந்தேகிக்கப்படும் சடலம் ஒன்று காணப்படுகின்றமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

இரத்தினபுரம் பகுதியில் பராமரிப்பு இன்றிக் காணப்படுகின்ற குறித்த காணிக்கு காணி உரிமையாளர்கள் சென்றபோது,

கிணற்றினுள் பாய் ஒன்றினால் சுற்றியவாறு சடலம் ஒன்று காணப்பட்டமை தொடர்பில் கிளிநொச்சி பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

சம்பவத்தை அடுத்து அங்கு சென்ற குற்றவியல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கிணற்றினை அண்மித்த பகுதியில் சில தடயங்கள் காணப்படுவதாலும் சடலம் பாயினால் சுற்றிக்காணப்படுவதாலும் மரணம் கொலை என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருப்பதாக தெரியவருகிறது.

நாளைய நாள் தடயவியல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்வார்கள் என்று பொலிஸார் எமது செய்தியாளருக்குத் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, மாவட்ட நீதிபதி சடலத்தை பார்வையிட்ட பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரியவருகிறது.

குறித்த சடலம் சில நாட்களுக்கு முன்னர் போடப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுவதாகவும் சடலம் ஆண் ஒருவருடையதாக இருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

இன்றைய வானிலை

Pagetamil

இயக்கத்துக்கு பயந்து உயர் நீதிமன்றம் சென்ற மஹிந்த!

Pagetamil

தமிழ் தேசிய கட்சிகளின் ஒற்றுமை சாத்தியமா?

Pagetamil

சாரதிகளுக்கான முக்கிய அறிவுறுத்தல்

east tamil

இந்திய மீனவர் அத்துமீறல்: எதிர்க்கட்சி தமிழ், முஸ்லிம் எம்.பிகளை சந்தித்த மீனவர் பிரதிநிதிகள்!

Pagetamil

Leave a Comment