30.5 C
Jaffna
April 13, 2025
Pagetamil
சினிமா

இரண்டு ஆண்டு கழித்து அண்ணாத்த அப்டேட்: கலாய்த்த நெட்டிசன்கள்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கும் அண்ணாத்த படத்தில் நடித்து முடித்துள்ளார் ரஜினிகாந்த். இந்த படத்தில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக நடிக்கிறார் நயன்தாரா. இவர்களுடன் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், ஜகபதி பாபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். வெற்றி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார். இந்நிலையில் ‘அண்ணாத்த’ படத்தில் பிரபல இந்தி நடிகர் இணைந்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

அண்ணாத்த படத்தை இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டிருந்தனர் படக்குழுவினர். ஆனால் கொரோனா அச்சம் காரணமாக திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடத்த இயலவில்லை. இந்நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா இரண்டாவது அலையின் தீவிரத்துக்கு முன்னதாகவே அண்ணாத்த படத்தின் பெரும்பாலான காட்சிகளை எடுத்து முடித்துவிட்டது படக்குழு.

இந்நிலையில் அண்மையில் மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்று ரஜினிகாந்த் இந்தியா திரும்பிய பின்ன்னர் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பை துவங்கினார்கள் படக்குழுவினர். அதனை தொடர்ந்து இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு மேற்கு வங்கத்தில் நடைபெற்றது. இந்நிலையில் அண்மையில் சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் ஸ்டுடியோ ஒன்றில் ‘அண்ணாத்த’ படத்தின் டப்பிங் பணிகள் துவங்கி நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் நடிகர் விஜய்யின் வேலாயுதம், தலைவா மற்றும் நடிகர் கார்த்தியின் தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பிரபல பாலிவுட் நடிகர் அபிமன்யு சிங் அண்ணாத்த படத்தில் புதிதாக இணைந்துள்ளார் என்கிற அறிவிப்பை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

அண்மையில் அண்ணாத்த படம் இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு 4.11.2021 அன்று படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவித்திருந்தனர் படக்குழுவினர். இந்நிலையில் சற்றுமுன் காஸ்ட் அப்டேட் வெளியிட்டுள்ளதால் தீபாவளிக்கு படம் வெளியாகுமா என்ற சந்தேகத்தில் உள்ளனர் ரசிகர்கள். படம் தொடங்கி இரண்டு ஆண்டுகள் கழித்து காஸ்ட் அப்டேட் போடுறீங்களே என கலாய்த்தும் வருகின்றனர் நெட்டிசன்கள்.

இதையும் படியுங்கள்

ஒரு பாடலுக்கு மீண்டும் நடனமாடும் தமன்னா!

Pagetamil

அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் – இது ‘ஹாலிவுட்’ லெவல்!

Pagetamil

‘மஞ்சும்மல் பாய்ஸ்’ சாதனையை முறியடித்த ‘எம்புரான்’!

Pagetamil

குடும்ப வன்முறை வழக்கை ரத்து செய்ய கோரி ஹன்சிகா மனு

Pagetamil

‘திருமணமான ஆணுடன் தொடர்பு வைக்க மாட்டேன்’: ஜி.வி.பிரகாஷுடனான உறவை மறுக்கும் நடிகை திவ்யபாரதி!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!