விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 8வது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது என்பதால் இதில் பங்கேற்று இருக்கும் போட்டியாளர்கள் மீது பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. இதற்கு முன் பங்கேற்ற பலர் சினிமாவிலும் சாதித்து இருக்கிறார்கள் என்பதால் தான் சூப்பர் சிங்கரில் பங்கேற்கும் அவர்களுக்கு அதிகம் பாப்புலாரிட்டி கிடைக்கிறது.
தற்போது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவர்களாக 3 பேர் இருக்கின்றனர். அனுராதா ஸ்ரீராம், எஸ்பிபி சரண், பென்னி தயால் ஆகியோர் நடுவர்களாக இருக்கின்றனர். பிரியங்கா மற்றும் மாகாபா ஆகியோரின் காமெடி கலந்த பாடல் நிகழ்ச்சியாக தொடர்ந்து நகர்ந்து கொண்டு இருக்கிறது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. இந்த நிலையில் ஸ்ரீதர் சேனாவை எலிமினேட் செய்ததால் வெடித்த சர்ச்சையால் நெட்டிசன்கள் அதிகம் திட்டி வந்த நிலையில் பென்னி டயால் சூப்பர் சிங்கர் பற்றி ஒரு அதிர்ச்சி முடிவை எடுத்து இருக்கிறார்.




