யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று (13) மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையில் 64 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 31 பேர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள்.
போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று 650 பேரின் மாதிரிகள் சோதனையிடப்பட்டது.
இதில், யாழ் மாவட்டத்தில், போதனா வைத்தியசாலையில் 8 பேர், அளவெட்டி மாவட்ட வைத்தியசாலையில் 2 பேர், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் 4 பேர் (இளவாலையை சேர்ந்த 8 நாள் சிசுவுக்கும்தொற்று உறுதியானது). உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர், ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலையில் 2 பேர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 14 பேர் என 31 பேருக்கு தொற்று உறுதியானது.
வவுனியா மாவட்டத்தில், வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 7 பேர், வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 8 பேர், செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலையில் 5 பேர், வவுனியா பொது வைத்தியசாலையில் ஒருவர், புளியங்குளம் மற்றும் நெடுங்கேணி மாவட்ட வைத்தியசாலைகளில் தலா ஒருவர் என 23 பேருக்கு தொற்று உறுதியானது.
மன்னார் மாவட்டத்தில், பொது வைத்தியசாலையில் 6 பேருக்கு தொற்று உறுதியானது.
முல்லைத்தீவு மாவட்டத்தில், பொது வைத்தியசாலையில் 4 பேருக்கு தொற்று உறுதியானது.