வவுனியாவில் கோவிட் தொற்றாளர்கள் இருவர் மரணமடைந்துள்ளதாக மாவட்ட சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கோவிட் தொற்று காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கோவிட் சிகிச்சை விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (13) இரவு குறித்த இருவரும் உயிரிழந்துள்ளனர்.
வவுனியா, செட்டிகுளம், நேரியகுளம் பகுதியைச் சேர்ந்த 76 வயதுடைய பெண் ஒருவரும், அம்பலாங்கொடவல பகுதியைச் சேர்ந்த 88 வயதுடைய ஆண் ஒருவருமே இவ்வாறு மரணமடைந்தவர்களாவர். அவர்களது உடல்களை சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி அடக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1