கொரோனா தொற்று ஏற்பட்டால், அல்லது தொற்று ஏற்பட்டிருக்கலாமென்ற சந்தேகம் ஏற்பட்டால் உடனடியாக வைத்தியசாலைக்கு செல்லும்படி வலியுறுத்தியுள்ளார் பொதுவைத்திய நிபுணர் கஜந்தன்.
சரியான நேரத்தில் வைத்தியசாலைக்கு செல்வதன் மூலம் உயிர்களை காப்பாற்றிக் கொள்ளலாமென தெரிவித்துள்ளார்.
இன்று யாழ் மருத்துவ சங்கத்தினால் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.
காய்ச்சல், இருமல் மட்டும் கொரோனா அறிகுறிகள் அல்ல. வயோதிபர்கள் உடம்பு இலாமல் இருப்பதாக கூறி வரும் வயோதிபர்களிற்கும் தொற்று ஏற்படுகிறது. இருமல் இல்லாமல் சுவாசக்கோளாறு, வயிற்றோட்டம் போன்றவற்றுடனும் கொரோனா வரலாம்.
இரண்டு, மூன்று நாட்களை விட அதிகமாக காய்ச்சல் இருந்தால், சிறுநீரின் அளவு குறைந்தால், மூச்சு கஸ்ரம் இருந்தால் உடனடியாக வைத்தியசாலையை நாட வேண்டும் என்றார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
3
+1
+1
+1
2