25.4 C
Jaffna
January 14, 2025
Pagetamil
விளையாட்டு

இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் விக்கெட்டுகளை கைப்பற்றுவதே எங்களது இலக்கு: கே.எல் ராகுல்

சதம் அடித்த பிறகு மிகப்பெரிய ரன்னை குவிக்காதது ஏமாற்றமே – கே. எல் ராகுல்

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது.

இந்தியா முதல் இன்னிங்சில் 364 ரன் குவித்து ஆல் அவுட் ஆனது. லோகேஷ் ராகுல் 129 ரன்னும், ரோகித் சர்மா 83 ரன்னும் எடுத்தனர். ஆண்டர்சன் 5 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 119 ரன் எடுக்கப்பட்டது. இங்கிலாந்து 245 ரன்கள் பிந்தங்கிய நிலையில் உள்ளது. கைவசம் 7 விக்கெட் உள்ளது.

இங்கிலாந்து அணி 23 ரன் எடுப்பதற்குள் 2 விக்கெட் இழந்தது. தொடக்க வீரர் டாம் சிப்லியையும் (11 ரன்), ஹசீப் அமீதையும் (0 ரன்), முகமது சிராஜ் அவுட் செய்தார்.

3-வது விக்கெட்டான ராய்பர்ன்ஸ்-கேப்டன் ஜோரூட் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டெடுக்கப்பட்டது.

மற்றொரு தொடக்க வீரரான பர்ன்ஸ் விக்கெட்டை (49 ரன்) முகமது ஷமி கைப்பற்றினார். ஜோரூட் 48 ரன்னும், பேர்ஸ்டோவ் 6 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் உள்ளனர். இன்று 3-வது நாள் ஆட்டம் நடக்கிறது.

நேற்றைய போட்டிக்கு பிறகு சதம் அடித்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ்ராகுல் நிருபர்களிடம் கூறியதாவது:-

சதம் அடித்த பிறகு நான் நிலைத்து நின்று ஆடாமல் ரன் குவிக்க முடியாமல் போனது ஏமாற்றம் அளிக்கிறது. நல்ல நிலையில் இருந்த நான் கூடுதலாக 70 முதல் 80 ரன்கள் அடித்திருக்க வேண்டும். அதை தவறவிட்டது வருத்தம் அளிக்கிறது.

இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் விக்கெட்டுகளை உடனடியாக கைப்பற்றுவதே எங்களது இலக்காகும். ஒவ்வொரு பேட்ஸ்மேன்களையும் அவுட் ஆக்க தனித்தனி திட்டம் வைத்துள்ளோம். என கூறி உள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து நியூஸிலாந்தின் மார்டின் கப்தில் ஓய்வு!

Pagetamil

தீர்ந்தது 10 ஆண்டு தாகம்: அவுஸ்திரேலியா வசமானது போர்டர் – கவாஸ்கர் டிராபி!

Pagetamil

சாம் கான்ஸ்டாஸ் உடன் மோதிய விராட் கோலி: ஐசிசி விதிகள் சொல்வது என்ன?

Pagetamil

நியூசிலாந்து தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

Pagetamil

21ஆம் நூற்றாண்டின் அரிய கிரிக்கெட் சாதனை: பாகிஸ்தான் அணி அசத்தல்!

Pagetamil

Leave a Comment