26.4 C
Jaffna
December 21, 2024
Pagetamil
விளையாட்டு

ரோஹித் அபார ஆட்டம்: இந்தியாவுக்கு வலுவான துவக்கம்!

இந்தியா, இங்கிலாந்து இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்த நிலையில், மழை குறுக்கிடு காரணமாக அப்போட்டி டிரா ஆனது. இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய அணி முதல்நாள் இரண்டாவது செஷன் முடிவுவரை 157/2 ரன்கள் சேர்த்துள்ளது. ரோஹித் 83 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

போட்டி துவங்குவதற்கு முன்பு மிதமான சாரல் மழை பெய்ததால், பந்துகள் தாறுமாறாக ஸ்விங் ஆகும் எனக் கணிக்கப்பட்டிருந்தது. அதன்படியே பந்துகள் ஸ்விங் ஆன நிலையில், இந்திய அணி ஓபனர்கள் ரோஹித் ஷர்மா, கே.எல்.ராகுல் இருவரும் சிறப்பான துவக்கம் தந்து அசத்தினார். முதல் செஷனின் இவர்கள் ஆட்டமிழக்கவில்லை. இந்திய அணி 46/0 என இருந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது செஷன் துவங்கியது. இங்கிலாந்து பௌலர்கள் கடுமையாக முயற்சித்தும் இந்த பார்ட்னர்ஷிப்பை பிரிக்க முடியவில்லை. ரோஹித் அதிரடி காட்ட, ராகுல் நிதானமாக விளையாடி வந்தார். இந்நிலையில் ரோஹித் அரை சதம் கடந்து அசத்தினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ரோஹித் 145 பந்துகளில் ஒரு சிக்ஸர், 11 பவுண்டரிகள் உட்பட 83 ரன்கள் குவித்து, ஆண்டர்சன் பந்துவீச்சில் கிளின் போல்ட் ஆனார்.

2015ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான போட்டியில் ரோஹித் ஷர்மா 79 ரன்கள் அடித்திருந்தார். அந்நிய மண்ணில் இதுதான் ரோஹித்தின் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிராக 83 ரன்கள் குவித்து, அந்நிய மண்ணில் தனது அதிகபட்ச ஸ்கோராக இதனைப் பதிவு செய்துள்ளார்.
ரோஹித் ஷர்மா ஆட்டமிழந்த பிறகு களமிறங்கிய புஜாரா 23 பந்துகளை எதிர்கொண்டு 9 ரன்கள் மட்டும் அடித்து, ஆண்டர்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தற்போது கே.எல்.ராகுல் 55 (143), விராட் கோலி 0 (2) ஆகியோர் களத்தில் இருக்கிறார்கள். இந்தியா 157/2 என இருக்கும் நிலையில் முதல்நாள் ஆட்டத்தின் இரண்டாவது செஷன் நிறைவடைந்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றார் இந்திய வீரர் அஸ்வின்!

Pagetamil

வெற்றியுடன் டிம் சவுதிக்கு பிரியாவிடை கொடுத்த நியூசிலாந்து!

Pagetamil

அனைத்துப் பல்கலைக்கழக மேசைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் ஆண், பெண் பிரிவுகளில் மொரட்டுவ, ஜே’புர அணிகள் சம்பியன்!

Pagetamil

அவுஸ்திரேலியா 445 ஓட்டங்கள்: திண்டாடும் இந்தியா!

Pagetamil

வழக்கமான ஃபோர்முக்கு திரும்பியது இலங்கை: வெறும் 42 ஓட்டங்களில் சுருண்டது!

Pagetamil

Leave a Comment