போதைப்பொருள் வியாபாரியின் அம்மா அடித்து 2 பொலிசார் காயம்!

Date:

எஹெலியகொட பொலிஸ் பகுதியில் உள்ள விலேகொடவில் போதைப்பொருள் வியாபாரியொருவரை கைது செய்யச் சென்ற இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள், சந்தேக நபரின் தாயாரின் தாக்குதலில் காயமடைந்தனர்.

எஹெலியகொடையைச் சுற்றி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சந்தேகநகர் ஒருவரின் வீட்டை பொலிசார் சோதனையிட்ட போது ஒரு தொகை ஹெரோயின் கைப்பற்றப்பட்டது.

பொலிசார் அவரை கைது செய்ய முயன்றபோது, தப்பிக்க முயன்றுள்ளார். இதன்போது, அவரை பிடித்திருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களின் தலையின் மீது, சந்தேகநபரின் தாயார் கொட்டனால் தாக்கியுள்ளார்.

இதில் இரண்டு பொலிசார் காயமடைந்தனர்.

எனினும், ஏனைய பொலிஸ் உத்தியோகத்தர்களால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

காயமடைந்த பொலிசாரும், சந்தேகநபரின் தாயாரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

எரிசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் இன்று நாடாளுமன்றத்தில்!

எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடிக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் இன்று நாடாளுமன்றத்தில்...

தரமற்ற நிலக்கரி ஊழலை விசாரிக்க கோரி போராட்டம்

தரமற்ற நிலக்கரி ஊழல் குறித்த தணிக்கை அறிக்கை மீது உடனடி விசாரணை...

லெபனானுடன் நேரடிப் பேச்சுவார்த்தைக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உத்தரவு: அடுத்த வாரம் அமெரிக்காவில் கூட்டம்!

ஹிஸ்புல்லாவை நிராயுதபாணியாக்குவதையும், "அமைதி உறவுகளை" ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு லெபனானுடன் நேரடிப்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்