நல்லூர் கோயில் வளாகத்தில் பொதுமக்களுக்கும் பொலீசாருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
நல்லூர் கோயிலின் வருடாந்த உற்சவம் கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில், மட்டுப்படுத்தப்பட்டோர் மாத்திரமே அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் நல்லூர் கோயில் முன்வாசலில் கோயில் நிர்வாகத்தினரின் உத்தரவில் பொலிசாரின் பஸ் நிறுத்தப்பட்டுள்ளது .
பொதுமக்கள் கொடியேற்ற நிகழ்வினை பார்க்காதவாறு தடைசெய்யப்பட்டுள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது..
இதேவேளை, நல்லூர் திருவிழா தொடர்பில் யாழ் மாநகரசபை வெளியிட்ட அறிவித்தலில் பொதுமக்களிற்கு தெளிவின்மை ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. மாநகரசபை தெளிவான அறிக்கையை வெளியிடாததன் எதிரொலியாக, இன்று பக்தர்கள் கையில் தடுப்பூசி அட்டைகளுடன் கோயிலுக்கு வந்ததை அவதானிக்க முடிந்தது. எனினும், தடுப்பூசி அட்டையிருந்தாலும் அனுமதியில்லையென அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.