24.6 C
Jaffna
January 9, 2025
Pagetamil
இலங்கை

2மரணங்கள்… 7 நாள் குழந்தைக்கும் தொற்று: வடமாகாண கொரோனா பரிசோதனை முடிவுகள்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 373 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதிக்கப்பட்டன.

இதில், சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 7 பேருக்கு தொற்று உறுதியானது. இதில் இளம் தம்பதியினர், 14, 26 வயதான சகோதரிகள் உள்ளடங்குகின்றனர்.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் இருந்து பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட, உயிரிழந்த 75 வயதான முதியவருக்கு தொற்று உறுதியானது.

யாழ் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உயிரிழந்த 71 வயதான பெண்ணிற்கும் தொற்று உறுதியானது.

யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 19 பேருக்கு தொற்று உறுதியானது. இதில் 9 வயதான பெண் பிள்ளையும், யாழ் பொலிஸ் நிலைய உத்தியோகத்தரும் உள்ளடங்குகின்றனர்.

நொதேர்ன் சென்ரல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவருக்கு,

தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 2 பேருக்கு தொற்று உறுதியானது. இதில் 7 நாள் குழந்தையும் உள்ளடங்குகிறது.

சாவகச்சேரிஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 2 பேருக்கு தொற்று உறுதியானது.

சங்கானை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 2 பேருக்கு தொற்று உறுதியானது.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 11 பேருக்கு தொற்று உறுதியானது.

யாழ் மாவட்டத்தில் 46 பேருக்கு தொற்று உறுதியானது.

கிளிநொச்சி மாவட்டத்தில், பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 13 பேருக்கு தொற்று உறுதியானது. இதில் தாயார், 20, 17 வயதான மகள்களிற்கும் தொற்று உறுதியானது.

பளை மாவட்ட வைத்தியசாலையில் 6 பேருக்கு தொற்று உறுதியானது. இதில் 18 வயதான ஒருவரும், 19 வயதான மூவரும், 21 வயதான ஒருவரும் உள்ளடங்குகின்றனர்.

அக்கராயன்குளம் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கும் தொற்று உறுதியானது.

கிளிநொச்சி மாவட்டத்தில் 20 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

வவுனியா மாவட்டத்தில், பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர், செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவர் (13 வயதான சிறுவன் உள்ளடங்கலாக),  நெடுங்கேணி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 3 பேர் என 6 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

மன்னார் மாவட்டத்தில், பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 12 பேருக்கு தொற்று உறுதியானது. இதில் 4 மாத பெண் குழந்தை, 17, 18, 22, 23, 25 வயதான யுவதிகளும், 19, 22 வயதான இளைஞர்களும் உள்ளடங்குகின்றனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில், பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 3 பேருக்கு தொற்று உறுதியானது.

காங்கேசன்துறை கடற்படை முகாம் 1, வசாவிளான் தனிமைப்படுத்தல் மையத்தில் ஒருவர் தொற்றிற்குள்ளாகினர்.

இதுதவிர, இன்று யாழ் மாவட்டத்தில்மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் சோதனையில் 72 பேருக்கு தொற்று உறுதியானது.

கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4 பேர், வேலணை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 5 பேர், பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4 பேர், மருதங்கேணி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர்  ஊர்காவற்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேர் தொற்றிற்குள்ளாகினர.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பேஸ்புக்கில் பியரை விளம்பரப்படுத்தியவருக்கு ரூ.25,000 அபராதம்!

Pagetamil

வில்பத்து கடற்கரையில் கரை ஒதுங்கிய 11 டொல்பின்கள்: மர்மம் தீராது, விசாரணை தீவிரம்

east tamil

100,000 சட்டவிரோத குடியேற்றவாசிகள் இலங்கைக்குள் நுழையவுள்ளனர்: ஜேவிபி சொல்லும் கதை!

Pagetamil

இன்றைய வானிலை

Pagetamil

தொலைபேசி வலையமைப்பில் சிக்கல் தவிர்க்க IMEI பதிவு அவசியம்

east tamil

Leave a Comment