கோலிவுட்டின் நம்பர் ஒன் நடிகையான நயன்தாரா படங்களில் நடிப்பதோடு சரி. அதன் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மாட்டார். ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகும்போதே நான் விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டேன் என்று கறாராக கூறிவிடுவார். தான் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டால் அந்த படம் ஓடாது என்பது நயன்தாராவின் நம்பிக்கை. தொடர்ச்சியாக டிடி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் நயன்தாரா கலந்து கொள்கிறார். அந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ வீடியோ வெளியாகி பலரையும் கவர்ந்துள்ளது.
வீடியோவை பார்த்த சமூக வலைதளவாசிகள், சினிமா ரசிகர்கள் கூறியிருப்பதாவது, நீங்கள் தயாரித்து நடித்த படம் ரிலீசாகும் நேரத்தில் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளம்பரம் செய்கிறீர்கள். இதை பார்க்கும் தயாரிப்பாளர்களுக்கு எவ்வளவு கடுப்பாக இருக்கும்?. தியேட்டர்களில் ரிலீஸான படங்களின் விளம்பர நிகழ்ச்சிகளுக்கே வராத நீங்கள் ஓடி ஓடி வெளியாகும் நெற்றிக்கண் படத்தின் விளம்பரத்திற்காக வருகிறீர்கள்.
இதை பார்க்கும் தயாரிப்பாளர்களோ, உங்களுக்கு வந்தால் ரத்தம், எனக்கு வந்தால் தக்காளி சட்னியா என்று கேட்க மாட்டார்களா என கேட்கப்படுகிறது. மிலிந்த் ராவ் இயக்கத்தில் நயன்தாரா கண் பார்வை இல்லாதவராக நடிக்கும் நெற்றிக்கண் படம் ஹாட்ஸ்டாரில் வெளியிடப்பட்டது. அந்த படத்தை தன் காதலரான இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து தயாரித்திருக்கிறார் என்பது நயன்தாரா ஆகும்.