29.3 C
Jaffna
March 29, 2024
சினிமா

தல – தளபதி சந்திப்பு மகிழ்ச்சியில் ரசிகர்கள்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் நடித்து வரும் பீஸ்ட் படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் இருக்கும் கோகுலம் ஸ்டுடியோஸில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தொடர்ந்து அதே கோகுலம் ஸ்டுடியோஸில் கிரிக்கெட் வீரர் தோனியின் விளம்பர பட ஷூட்டிங்கும் நடந்தது.

ஒரே இடத்தில் ஷூட்டிங் நடந்ததால் தோனி, விஜய் சந்திப்பு நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்பார்த்தபடியே தல, தளபதி சந்திப்பு நடந்தது. அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. தல, தளபதி சந்திப்பா, யாருக்கு யாரு தல என்று கேட்கலாம். தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் தோனியை தல என்று தான் பாசமாக அழைக்கிறார்கள். அதனால் தான் தோனி, விஜய் சந்திப்பை தல, தளபதி சந்திப்பு என்கிறார்கள்.

விஜய்யும், தோனியும் சிறிது நேரம் பேசியிருக்கிறார்கள். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படத்தை விஜய்யின் மேனேஜர் ஜெகதீஷ் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். விஜய்யின் கெட்டப்பை பார்த்த ரசிகர்களோ, தளபதி பீஸ்ட் மோடில் வேறு மாறி இருக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் பீஸ்ட் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். பீஸ்ட் படத்திற்காக ஒரு பாடலை எழுதி, பாடவும் செய்கிறாராம் சிவகார்த்திகேயன். அவர் விஜய்க்காக நிச்சயம் ஏதாவது ஸ்பெஷலாக எழுதுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இயக்குநர் ஷங்கரின் மகளுக்கு இரண்டாவது திருமணம்!

Pagetamil

ஷங்கரின் ‘கேம் சேஞ்சர்’ முதல் சிங்கிள்

Pagetamil

வெளிநாட்டுக்காரரை இரகசியமாக திருமணம் செய்து கொண்ட நடிகை டாப்ஸி

Pagetamil

“இது தேர்தல் நேரம்… மூச்சுவிடக் கூட பயமாக உள்ளது!” – ரஜினிகாந்த்

Pagetamil

மிரட்டும் பிரமாண்டத்துடன் சூர்யாவின் ‘கங்குவா’ டீசர்

Pagetamil

Leave a Comment