28.9 C
Jaffna
April 14, 2025
Pagetamil
இந்தியா

தற்கொலை செய்த 13 வயது சிறுமியின் வயிற்றில் 7 மாத பெண் சிசு: தப்பியோடிய சித்தப்பாவும் தற்கொலை!

தாயில்லாத மகளை பத்திரமாக பார்த்துக்கொள் என்று சொல்லிவிட்டு நம்பிக்கையுடன் சென்றிருக்கிறார் தந்தை. ஆனால் சிறுமியை சீரழித்து அவர் தற்கொலைக்கு காரணமாக இருந்த சித்தப்பா. குற்ற உணர்ச்சியும் போலீஸ் தேடுதல் வேட்டையும் துரத்த அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அடுத்த கிராமத்தில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார் அந்த 13 வயது சிறுமி. சிறுமியின் தாயார் காலமாகி பத்து ஆண்டுகள் ஆகிவிட்டது. தந்தையும், தாத்தா, பாட்டியும்தான் சிறுமியை வளர்த்து வந்துள்ளனர்.

தந்தையும் பிழைப்புக்காக கோவையில் தங்கி இருக்கிறார். கோவைக்கு போகும்போது, தன் மகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுமாறு அப்பா, அம்மாவிடமும் தன் தம்பி செந்திலிடமும் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார். ஆனால், தம்பியோ அந்த சிறுமிக்கு சித்தப்பாவாக நடந்துகொள்ளவில்லை.

கடந்த செவ்வாய்க்கிழமை அன்று வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். தகவலறிந்து ஆலங்குடி டிஎஸ்பி வடிவேல் மற்றும் கீரமங்கலம் ஆய்வாளர் பாஸ்கரன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் சிறுமியின் தற்கொலைக்கான காரணம் என்னவென்று போலீசார் விசாரித்து வந்த நிலையில், உடற்கூறு ஆய்வு முடிவுகள் வெளிவந்தன. அதை பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். உடற்கூறு ஆய்வின்போது சிறுமியின் வயிற்றில் ஏழு மாத பெண் சிசு இறந்த நிலையில் இருந்திருக்கிறது. இதையடுத்து சிசுவை டிஎன்ஏ ஆய்வுக்காக மருத்துவக்குழுவினர் அனுப்பி இருக்கின்றனர்.

இதையடுத்து இந்த வழக்கு ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. ஆலங்குடி அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது யார் என்பது பற்றி தீவிர விசாரணையில் இறங்கினர். அப்போது சிறுமியின் சித்தப்பா செந்தில் தான் காரணம் என்று தெரிய வந்தது. இதையடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்ய தேடினர்.

இதை அறிந்த செந்தில் தலைமறைவாகி விட்டார். இதனால் செந்திலின் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். இரண்டு நாள் கழித்து கொத்தமங்கலம் அருகே சிறுமியின் சித்தப்பா செந்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. அங்கே விரைந்து சென்ற போலீசார் செந்திலின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அண்ணன் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து அவர் தற்கொலைக்கு காரணமாக இருந்த குற்ற உணர்ச்சியில் சித்தப்பா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கீரமங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

இதையும் படியுங்கள்

டெல்லி லட்சுமிபாய் கல்லூரி சுவர்களில் பசு சாணத்தால் பூச்சு: முதல்வர் சொன்ன விளக்கமும் சர்ச்சையானது!

Pagetamil

”தற்போது எந்த வம்புக்கும் போவதில்லை; பேரன், பேத்திகளுடன் இருக்கிறேன்” – வரிச்சியூர் செல்வம் பேட்டி

Pagetamil

தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

Pagetamil

திருமணத்தில் திடீர் திருப்பம்: மணமகளை விட்டுவிட்டு மாமியாருடன் ஓடிய மாப்பிள்ளை!

Pagetamil

அதிமுக- பாஜக: “இபிஎஸ் தலைமையில் கூட்டணி” – உறுதிசெய்த அமித் ஷா

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!