24.6 C
Jaffna
January 5, 2025
Pagetamil
இந்தியா

ஆண்டுதோறும் ஜூன் 3ஆம் திகதி கருணாநிதி பெயரில் செம்மொழி தமிழ் விருது!

கருணாநிதி பெயரில் செம்மொழி தமிழ் விருது – ஆண்டுதோறும் ஜூன் 3 -ந்தேதி வழங்கப்படுகிறது.

தலைமை செயலகம் முதல் மாநிலத்தின் அனைத்து துறை அலுவலகங்கள் வரை தமிழை ஆட்சி மொழியாக பயன்படுத்துதல் வலுப்படுத்தப்படும் என பட்ஜெட் உரையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.

பட்ஜெட் உரையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது:-

சென்னையில் உள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு புத்துயிர் அளிக்கப்படும். 2010-ம் ஆண்டு முதல் வழங்கப்படாமல் இருக்கும் கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருது இனி ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 3-ந்தேதி ரூ .10 லட்சம் ரொக்க தொகையுடன் வழங்கப்படும்.

நிர்வாகம் மக்களை சென்றடைய வேண்டுமென்றால் அரசு தனது பணிகளை மக்களின் மொழியில் செயல்படுத்த வேண்டும். இதுதொடர்பாக தலைமை செயலகம் முதல் மாநிலத்தின் அனைத்துத்துறை அலுவலகங்கள் வரை தமிழை ஆட்சி மொழியாக பயன்படுத்துதல் வலுப்படுத்தப்படும்.

தமிழ் இணைய கல்வி கழகத்தால் உருவாக்கப்பட்ட யூனிகோடு பாண்ட் அனைத்து அரசு துறைகளிலும் பயன்படுத்துவதை உறுதி செய்கிறது.

தி.மு.க. ஆட்சி அமைந்ததும் மக்களின் குறைகளை தீர்க்க உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இந்த திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் இருந்து 4 லட்சத்து 57 ஆயிரத்து 645 மனுக்கள் பெறப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. அந்த மனுக்களை பரிசீலித்து எடுத்து சரி பார்த்து 2 லட்சத்து 29 ஆயிரத்து 216 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘சார்’ சர்ச்சை: அண்ணா பல்கலை. விசாரணை குறித்து ஆதாரமற்ற தகவல் – காவல் துறை விளக்கம்

Pagetamil

விண்வெளியில் வேளாண்மை செய்யும் ஆய்வில் வெற்றி!

east tamil

மகா கும்பமேளாவுக்கு தயாரான பிரயாக்ராஜ்: 45 கோடி பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்ப்பு

Pagetamil

ஆக்ராவில் அவுரங்கசீப் மாளிகை இடிப்பு

Pagetamil

7 மணி நேர காத்திருப்புக்குப் பின் அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை

Pagetamil

Leave a Comment