24.5 C
Jaffna
January 15, 2025
Pagetamil
விளையாட்டு

வரலாற்றில் இடம் பிடித்தார் ராகுல்: அபார பேட்டிங்!

இந்தியா, இங்கிலாந்து இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடக்கிறது. முதல் போட்டியில் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்த நிலையில், மழை குறுக்கிடு காரணமாக அப்போட்டி டிரா ஆனது. தற்போது, ​​இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய அணி முதல்நாள் ஆட்ட நேர முடிவில் 276/3 ரன்கள் சேர்க்கும் நிலையில் உள்ளது. ஓபனர் கே.எல்.ராகுல் சதம் அடித்து, வரலாற்றில் இடம் பிடித்துள்ளார்.

முதல்நாள் இரண்டாவது செஷன் முடிவுவரை இந்திய அணி, 157/2 ரன்கள் சேர்த்திருந்தது. கே.எல்.ராகுல் 55 (143), விராட் கோலி 0 (2) ஆகியோர் களத்தில் இருந்தார்கள். மூன்றாவது செஷன் துவக்கத்திலிருந்து இருவரும் அபாரமாக விளையாடத் துவங்கினர். குறிப்பாக, ஓபனர் கே.எல்.ராகுல் துல்லியமாக பந்துகளை எதிர்கொண்டு ரன்களை சேர்த்து வந்தார். இறுதியில் இவர் சதம் விளாசி சில வரலாற்று சாதனைகளைப் படைத்தார். லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இதற்குமுன் இரண்டு இந்திய ஓபனர்கள் மட்டுமே சதம் அடித்திருக்கிறார்கள். 1952ஆம் ஆண்டில் வினோ மன்கட் (184), 1990-ல் ரவி சாஸ்திரி (100) தற்போது கே.எல்.ராகுல் இந்த லிஸ்டில் சேர்ந்துள்ளார்.

ஆசியாவுக்கு வெளியே அதிக சதம் அடித்த இந்திய ஓபனர்கள் லிஸ்டிலும் ராகுல் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். சுனில் கவாஸ்கர் ஆசியாவுக்கு வெளியே 15 சதங்கள் விளாசினார். அடுத்த இடத்தில், விரேந்தர் சேவாக் (4) இருந்த நிலையில், இவருடன் தற்போது கேஎல் ராகுல் (4*) இணைந்துள்ளார். வினோ மன்கட் மற்றும் ரவி சாஸ்திரி (3) உறுப்பினர்கள் மூன்றாவது இடத்தில் உள்ளனர். ராகுல் சதம் விளாசிய நிலையில் மறுபக்கம் விராட் கோலியும் சிறப்பாக விளையாடி ரன்களைச் சேர்த்து வந்தார். ஒல்லி ராபின் வீசிய ஒரு பந்தில், அற்புதமான முறையில் கவர் டிரைவ் ஆடி, தனது சிறந்த பார்மை வெளிப்படுத்தினார். இதனால், கோலியும் ரன்களை குவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 103 பந்துகளை எதிர்கொண்டு 42 ரன்கள் மட்டும் அடித்து, இந்த முறையில் பெரிய ஸ்கோர் அடிக்காமல் ஆட்டமிழந்தார்.
தற்போது கே.எல்.ராகுல் 127 (248), அஜிங்கிய ரஹானே 1 (22) அவர்களுடைய களத்தில் உள்ளது. முதல்நாள் ஆட்டம் நிறைவடைந்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘உங்களை விட என் மகன் சிறந்த வீரர்’ – கபில் தேவுக்கு ‘பேப்பர் கட்டிங்’ அனுப்பிய யோக்ராஜ் சிங்

Pagetamil

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து நியூஸிலாந்தின் மார்டின் கப்தில் ஓய்வு!

Pagetamil

தீர்ந்தது 10 ஆண்டு தாகம்: அவுஸ்திரேலியா வசமானது போர்டர் – கவாஸ்கர் டிராபி!

Pagetamil

சாம் கான்ஸ்டாஸ் உடன் மோதிய விராட் கோலி: ஐசிசி விதிகள் சொல்வது என்ன?

Pagetamil

நியூசிலாந்து தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

Pagetamil

Leave a Comment