பிரான்சில் தமிழ் பெண்ணும், அவரது மகளும் கொல்லப்பட்டுள்ளனர்.
பாரிஸுக்கு வடமேற்கே முப்பது கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள செயிண்ட்-ஓயன்-எல் ஆமினேயில் உள்ள அவர்களது வீட்டில் கொலை நடந்தது.
52 வயதான தாய் , 22 வயதான மகள் ஆகியோரது சடலங்களை நேற்று முன்தினம் (10) பொலிசார் மீட்டனர்.
சடலங்கள் மீட்கப்பட்ட வீட்டில் மிகவும் அதிர்ச்சியுற்ற நிலையில் காணப்பட்ட
தந்தையும் இரண்டு ஆண் பிள்ளைகளும் பொலீஸாரால் மருத்துவமனைக்குக்
கொண்டு செல்லப்பட்டனர். சம்பவம் நடந்த போது ஒரு மகன் அங்கிருந்தார் என்றும், மற்றையவர் பிறிதொரு இடத்தில் இருந்தார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
குடும்ப வன்முறையே கொலைக்கு காரணமாக இருக்கலாமென பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
நேற்று முன்தினம் காலை வேலை முடிந்து வீடு திரும்பிய குடும்பத்தலைவர், மனைவியும்
மகளும் வீட்டு அறையில் கூரிய ஆயுதத்தால் ஏற்பட்ட காயங்களுடன் சடலமாகக் கிடப்பதைக் கண்டுள்ளார். இருவரது கழுத்திலும் ஆழமாக கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன.
அவர் உடனடியாக பொலிசாருக்கு தகவல் வழங்கினார்.
வீட்டில் அதிர்ச்சியடைந்த நிலையில் மகன் காணப்பட்டுள்ளார்.
தந்தை, இரண்டு மகன்கள் அதிர்ச்சியடைந்து இருந்த நிலையில் அவர்களும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அங்கு பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் விரைவில் விசாரணை இடம்பெறும்.