26.2 C
Jaffna
December 27, 2024
Pagetamil
இலங்கை

நேற்று 2,987 பேருக்கு தொற்று!

நேற்று 2,987 தொற்றாளர் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட COVID-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 342,079 ஆக உயர்ந்துள்ளது.

நேற்றைய தொற்றாளர்களில் 2,890 பேர் புத்தாண்டு COVID-19 கொத்தணியுடன் இணைக்கப்பட்டுள்ளனர்.

வெளிநாடுகளில் இருந்து அண்மையில் நாட்டிற்கு வந்த 97 நபர்களுக்கும் நேற்று COVID-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

நாடு முழுவதும் பல மையங்களில் தற்போது 36,333 பேர் கொரோனா வைரஸுக்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று, COVID-19 இலிருந்து குணமடைந்த 2,244 நபர்கள் மருத்துவமனைகளில் இருந்து வெளியேறினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 300,406 ஆக உயர்ந்துள்ளது.

COVID-19 தொற்று சந்தேகத்தில் 3,697 பேர் தற்போது மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

இதேவேளை, நேற்று ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான COVID-19 இறப்புகளை இலங்கை உறுதிப்படுத்தியது. நேற்று 124 இறப்புகள் பதிவாகியுள்ளன, நாட்டின் இறப்பு எண்ணிக்கை 5,464 ஆக அதிகரித்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

விமானத்திற்குள் உயிரிழந்த இலங்கை பெண்

east tamil

ஜனாதிபதி வெளியிட்டுள்ள அதி விசேட வர்த்தமானி

east tamil

கிளிநொச்சி மாவட்டம் அபிவிருத்தியில் பின்னடைவு – சிவஞானம் சிறீதரன்

east tamil

பதுளைக்கு விஷேட ரயில் சேவை

east tamil

அஸ்வெசும நலன்களுக்கு நிலுவைத் தொகை இன்று முதல் வங்கி கணக்குகளில்!

east tamil

Leave a Comment