தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். இவர் நடிப்பதோடு மட்டுமல்ல இயக்குனர், பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவராக வலம் வருகிறார். அந்த வகையில், நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தில் நடிகர் தனுஷ் பாடல் ஒன்றை பாட உள்ளதாகவும், அப்பாடல் வரிகளை அவரே எழுதி உள்ளதாகவும் தகவல் வெளியீடு உள்ளது.
பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும் செல்வராகவன், ஷைன் டாம் சாக்கோ, யோகிபாபு, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். காதல், நகைச்சுவை, அதிரடி சண்டைக் காட்சிகளுடன் தயாராகி வரும் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1