25.8 C
Jaffna
December 26, 2024
Pagetamil
இந்தியா

தடுப்பூசிகளை கலந்து செலுத்துவது குறித்து ஆராய்ச்சி.

கொரோனா பரவலை தடுக்கவும், உயிர் சேதத்தை தவிர்க்கவும் தடுப்பூசி மிகப்பெரிய உபயோகமாக உள்ளது. தற்போதைய சூழலில் முதலாவது தவணையிலும், 2-வது தவணையிலும் ஒரே வகை தடுப்பூசியை செலுத்திக் கொள்வதற்கு மட்டுமே இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) அனுமதி வழங்கியுள்ளது.

அதில், முதல் தவணையில் ஒரு வகை தடுப்பூசியையும், 2-வது தவணையில் மற்றொரு வகை தடுப்பூசியும் செலுத்தினால் கொரோனாவுக்கு எதிரான எதிர்ப்பாற்றல் அதிகமாக உருவாவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. கோவிஷீல்டு தடுப்பூசியைப் பொருத்தவரை சிம்பன்ஸியில் இருந்து பெறப்பட்ட வீரியம் குறைக்கப்பட்ட அடினோ வைரஸ் மரபணு ரீதியாக சில மாற்றங்கள் செய்து அதனை மனித உடலுக்குள் செலுத்தும் நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

கோவேக்சின் தடுப்பூசி செயலிழந்த கொரோனா வைரஸ் தீ நுண்மியை மருத்துவ நுட்பத்தில் உரிய மாற்றங்கள் செய்து உடலில் செலுத்தும் வகையில் தயாரிக்கப்படுகிறது. இந்த இரு தடுப்பூசிகளையும் மாறி மாறி செலுத்திக்கொள்வது பாதுகாப்பானது என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேலூர் சி.எம்.சி மருத்துவக்கல்லூரி விண்ணப்பித்திருந்தது. அதற்கு தற்போது ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. சி.எம்.சி ஆஸ்பத்திரி டாக்டர் ஜேக்கப்ஜான் தலைமையிலான குழுவினர் இது குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நெரிசலில் உயிரிழந்த பெண் குடும்பத்தினருக்கு ‘புஷ்பா’ படக்குழு சார்பில் ரூ.2 கோடி நிதியுதவி

Pagetamil

“என்னை நானே சாட்டையால் அடித்துக் கொள்வேன், செருப்பு அணிய மாட்டேன்!” – அண்ணாமலை கொந்தளிப்பு

Pagetamil

தமிழக மீனவர்கள் கைது, தாக்குதல் சம்பவம்: மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

Pagetamil

3 கணவர்களிடமும் இயற்கைக்கு மாறான உறவு குற்றச்சாட்டு: பெண் கைது!

Pagetamil

12 இளைஞர்களை காதலித்து ஏமாற்றிய பெண்: 19 வயது இளைஞருடன் ஓட்டம்

Pagetamil

Leave a Comment