26.7 C
Jaffna
December 28, 2024
Pagetamil
லைவ் ஸ்டைல்

சிவப்பு அரிசி பாயாசம் செய்யும் முறை.

சிவப்பு அரிசி பாயாசம்
நார்ச்சத்து அதிகம் உள்ள சிவப்பு அரிசி உணவுகளை அவ்வப்போது சாப்பிட்டு வருவது செரிமான உறுப்புகளின் நலத்தை மேம்படுத்தும். சிவப்பு அரிசி புரதச்சத்து அதிகம் நிறைந்த ஒரு தானியமாகும்.

தேவையான பொருட்கள்

சிவப்பு அரிசி – ½ கப்
தேங்காய் பால் – 1 கப்
ஏலப்பொடி – 1 சிட்டிகை
நெய் – 2 டீஸ்பூன்
நட்ஸ் பவுடர் – 1 டீஸ்பூன்
பாலிஷ் செய்யப்படாத சர்க்கரை அல்லது டேட்ஸ் சிரப் – சுவைக்கு ஏற்ப

செய்முறை

அரிசியை இரவு முழுவதும் ஊறவிட்டு, பின்னர் 3 கப் தண்ணீர் ஊற்றி 15 நிமிடங்கள் வேக விடவேண்டும். வெந்த அரிசியை ஆற வைத்து, பின்னர் மிக்ஸியில் கொர கொரவென்று அரைத்துக் கொள்ளவும்.

வாணலில் நெய் விட்டு அரைத்தவற்றை சேர்த்து தேங்காய் பால் ஊற்றி, நட்ஸ் பவுடர், ஏலப்பொடி, தேவையான பாலிஷ் செய்யப்படாத சர்க்கரை அல்லது டேட்ஸ் சிரப் ஊற்றி கலக்கவும்.சூடானதும் இறக்கி விடலாம். சூப்பரான சிவப்பு அரிசி பாயாசம் ரெடி.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வரும் காதலர் தினத்தில் உங்கள் காதலை முன்மொழிய வெற்றிகரமான சூத்திரம் இதுதான்!

Pagetamil

கோழி இறைச்சியை சமைப்பதற்கு முன் கழுவக்கூடாதா?

Pagetamil

பருவமடைந்த, பிரசவித்த பெண்களுக்கான பிரத்யேக உணவுகள்!

Pagetamil

கணவாய் வறுவல்

Pagetamil

வெங்காயத் தாளில் 10 விதமான ரெசிப்பி!

Pagetamil

Leave a Comment