25.4 C
Jaffna
January 14, 2025
Pagetamil
விளையாட்டு

இந்திய அணியிலிருந்து ரவி சாஸ்திரி விலகல்.

தான் மீண்டும் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க மாட்டேன். டி20 உலகக் கோப்பையுடன் பயிற்சியாளர் பதவியிலிருந்து விடைபெற விரும்புகிறேன் என பிசிசிஐ நிர்வாகிகளிடம், ரவி சாஸ்தரி தெரிவித்துவிட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.

இந்திய அணிக்கு பயிற்சியாளராகச் செயல்படுபவர் 60 வயதுவரை மட்டுமே, அப்பதவியில் நீடிக்க முடியும். தற்போது ரவி சாஸ்திரிக்கு 59 வயதாகிவிட்டது. இதனால், அவர் பதவி நீட்டிப்பு செய்யப்பட்டாலும் ஒரு வருடம் மட்டுமே பயிற்சியாளராக இருப்பார். இதன்காரணமாகத்தான், ரவி சாஸ்திரி இந்த முடிவினை எடுத்திருப்பாகத் தெரிகிறது. மேலும், புது பயிற்சியாளரை நியமிக்கும் முடிவில்தான் பிசிசிஐ இருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.

டி20 உலகக் கோப்பை முடிந்த பிறகு, பயிற்சியாளர் பதவிக்கான அறிவிப்பு வெளியிடப்படும். அதன்பிறகு தேர்வுக்குழு அமைக்கப்பட்டு, புது பயிற்சியாளர் தேர்வு செய்யப்படுவார். ராகுல் திராவிட் விண்ணப்பிக்கும் பட்சத்தில், அவர்தான் புது பயிற்சியாளராகத் தேர்வு செய்யப்படுவார் எனக் கூறப்படுகிறது. தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியுடன், பீல்டிங் கோச் ஸ்ரீதர், பௌலிங் கோச் பரத் அருண், பேட்டிங் கோச் விக்ரம் ரத்தோர் ஆகியோரும் விலகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

2014ஆம் ஆண்டு இந்திய அணிக்கு ரவி சாஸ்திரி மேனேஜராக நியமிக்கப்பட்டார். 2016ஆம் ஆண்டுவரை அப்பதவியில்தான் இருந்தார். அடுத்து அனில் கும்ளே இந்திய அணி பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட நிலையில், சில கருத்து மோதல் காரணமாக ஒரே ஆண்டில் அப்பதவியிலிருந்து ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து ரவி சாஸ்திரிக்கு பயிற்சியாளர் பதவி கிடைத்தது. இவரது பயிற்சியின்கீழ், இந்திய அணி இரண்டுமுறை ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்தது. 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையில் இந்தியா அரையிறுதிவரை முன்னேறியது. அடுத்து, சமீபத்தில் நடந்து முடிந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா இறுதிப் போட்டிவரை முன்னேறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து நியூஸிலாந்தின் மார்டின் கப்தில் ஓய்வு!

Pagetamil

தீர்ந்தது 10 ஆண்டு தாகம்: அவுஸ்திரேலியா வசமானது போர்டர் – கவாஸ்கர் டிராபி!

Pagetamil

சாம் கான்ஸ்டாஸ் உடன் மோதிய விராட் கோலி: ஐசிசி விதிகள் சொல்வது என்ன?

Pagetamil

நியூசிலாந்து தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

Pagetamil

21ஆம் நூற்றாண்டின் அரிய கிரிக்கெட் சாதனை: பாகிஸ்தான் அணி அசத்தல்!

Pagetamil

Leave a Comment