மோட்டோரோலா நிறுவனம் புதிய எட்ஜ் 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் இந்திய வெளியீட்டு தேதியை அறிவித்து இருக்கிறது.
மோட்டோரோலா எட்ஜ் 20 மற்றும் எட்ஜ் 20 பியூஷன் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் ஆகஸ்ட் 17 ஆம் தேதி அறிமுகமாகின்றன. பல்வேறு டீசர்களை தொடர்ந்து இரு மாடல்களின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
அம்சங்களை பொருத்தவரை எட்ஜ் 20 மாடலில் 6.67 இன்ச் OLED பேனல், HDR10+, 144Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்படுகிறது. எட்ஜ் 20 பியூஷன் மாடலில் இதே டிஸ்ப்ளே 90Hz ரிப்ரெஷ் ரேட் உடன் வழங்கப்படுகிறது. இரு மாடல்களிலும் புகைப்படங்களை எடுக்க 108 எம்.பி. பிரைமரி கேமரா, அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.
எட்ஜ் 20 பியூஷன் மாடலில் 2 எம்பி டெப்த் சென்சார், 8 எம்பி டெலிபோட்டோ கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இரு மாடல்களிலும் ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ்., 2 ஆண்டுகளுக்கு மாதாந்திர செக்யூரிட்டி அப்டேட்கள் வழங்கப்படுகிறது. இந்தியாவில் மோட்டோ எட்ஜ் 20 மற்றும் எட்ஜ் 20 பியூஷன் மாடல்கள் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கின்றன. இரு மாடல்களின் விலை அடுத்த வாரம் அறிவிக்கப்பட்டு விடும்.