பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான நடிகர் ஹரிஷ் கல்யாண் தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவருடைய நடிப்பில் பியார் பிரேமா காதல் என்ற திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்த இந்த படத்தை இளன் இயக்கியிருந்தார்.
இதையடுத்து இதே கூட்டணியில் ‘ஸ்டார்’ என்ற திரைப்படம் தயாராவதாக கடந்தாண்டு அறிவிக்கப்பட்டது. அதோடு அப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் ரஜினி, கமல், ஷாருக்கான் ஆகியோரின் கெட்-அப்பில் ஹரிஷ் கல்யாண் இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின.
இந்நிலையில், ஹரிஷ் கல்யாண் நடிக்க இருந்த ‘ஸ்டார்’ படம் கைவிடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இதே கதையில் ஹரிஷ் கல்யாணுக்கு பதிலாக தனுஷை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1