29.3 C
Jaffna
April 13, 2025
Pagetamil
லைவ் ஸ்டைல்

மகிழ்ச்சியான துணையிருந்தால் ஆயுள் கூடுமாம்.

மகிழ்ச்சியான வாழ்க்கைத் துணை அமைந்தால் அவர் வெளிப்படுத்தும் மகிழ்ச்சி, துணையின் ஆரோக்கியத்திலும், ஆயுளிலும் முக்கியமான விளைவுகளை ஏற்படுத்த முடியும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 இதுதொடர்பாக சைக்காலஜிகல் சயின்ஸ் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில், “மகிழ்ச்சியான வாழ்க்கை துணையுடன் பயணிப்பது நீண்ட கால திருமண பந்தத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

 இதுதொடர்பாக 4,400 தம்பதிகளை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் 50 வயதை கடந்தவர்கள். உடல் ரீதியான செயல்பாடுகள், உடல் நலம், பாலினம், வயது, கல்வி, வருவாய், வாழ்க்கை திருப்தி உள்பட பல விஷயங்கள் கவனத்தில் கொள்ளப்படுகின்றன. எட்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் ஆய்வு செய்ததில் 16 சதவீதம் பேர் இறந்திருக்கிறார்கள்.

 வயது முதிர்வு, குறைந்த பொருளாதார நிலை, குறைந்த உடல் உழைப்பு, மோசமான உடல் ஆரோக்கியம் போன்ற இறப்புக்கு காரணமாக உள்ளது. உறவில் திருப்தி இல்லாத நிலை, வாழ்க்கையில் திருப்தியின்மை போன்ற காரணங்களும் முக்கிய பங்கு வகிக்கிறது.

 இதன் மூலம் மகிழ்ச்சியான துணை இருந்தால் இறப்பும் தள்ளிப்போகும், ஆயுள் கூடும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்

சமையல் குறிப்புக்கள் – கோவா வடை

Pagetamil

திருகோணமலை ஸ்பெஷல் மாமைற் முறுக்கு

Pagetamil

மட்டக்களப்பு மரக்கறி கூட்டுக்கறி

Pagetamil

வரும் காதலர் தினத்தில் உங்கள் காதலை முன்மொழிய வெற்றிகரமான சூத்திரம் இதுதான்!

Pagetamil

கோழி இறைச்சியை சமைப்பதற்கு முன் கழுவக்கூடாதா?

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!