விவோ நிறுவனத்தின் புதிய Y சீரிஸ் ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர் கொண்டிருக்கிறது. விவோ நிறுவனம் Y53s ஸ்மார்ட்போனினை சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போனில் 6.58 இன்ச் FHD+ ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 64 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா, 16 எம்பி செல்பி கேமரா, பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு உள்ளது.
புதிய விவோ ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த பன்டச் ஓஎஸ் 11.1, மல்டி டர்போ 5.0, அல்ட்ரா கேம் மோட், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.
விவோ Y53s அம்சங்கள்
– 6.58 இன்ச் 2408×1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன்
– ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி80 12nm பிராசஸர்
– 950MHz ARM மாலி-G52 2EEMC2 GPU
– 8 ஜிபி LPDDR4x ரேம், 128 ஜிபி மெமரி
– டூயல் சிம்
– ஆண்ட்ராய்டு 11 மற்றும் பன்டச் ஒஎஸ் 11.1
– 64 எம்பி பிரைமரி கேமரா, LED பிளாஷ், f/1.79
– 2 எம்பி டெப்த் கேமரா
– 2 எம்பி மேக்ரோ கேமரா, f/2.4
– 16 எம்பி செல்பி கேமரா, f/2.0
– பக்கவாட்டில் கைரேகை சென்சார்
– 3.5mm ஆடியோ ஜாக்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
– யு.எஸ்.பி. டைப் சி
– 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
– 18 வாட் பாஸ்ட் சார்ஜிங்
விவோ Y53s ஸ்மார்ட்போன் டீப் சீ புளூ மற்றும் பென்டாஸ்டிக் ரெயின்போ நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 19,490 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை முன்னணி வலைதளங்கள் மற்றும் ஆப்லைன் ஸ்டோர்களில் நடைபெறுகிறது.