நாட்டில் நிலவும் சுகாதார நிலைமைகளின் அடிப்படையில் சேவை வழங்கல் தொடர்பாக பரீட்சைகள் திணைக்களம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
சான்றிதழ்களை பெற ஒன்லைனில் அல்லது மின்னஞ்சல் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளது.
தேவையின் அடிப்படையில் சான்றிதழ் வெளிவிவகார அமைச்சு அல்லது விண்ணப்பதாரரின் முகவரிக்கு விரைவு அஞ்சல் மூலம் அனுப்பப்படும்.
பரீட்சைகள் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ மொபைல் அப்ளிகேஷனைப் பயன்படுத்தி நபர்கள் சான்றிதழ்களுக்கு விண்ணப்பிக்கலாம், மேலும் விவரங்களை திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் பெறலாம்.
2001 மற்றும் அதற்குப் பிந்தைய ஆண்டுகளின் க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சை சான்றிதழ்களுக்கு 0112788137 என்ற எண்ணை அழைக்க வேண்டும். அதற்கு முந்தைய ஆண்டுகளுக்கான பரீட்சை சான்றிதழ்கள் பற்றிய தகவல்களைப் பெற 0112784323 என்ற அழைக்கலாம்.