‘நவரசா’ பாணியில் ஓடிடி ரிலீசுக்கு தயாராகும் மேலும் ஒரு ஆந்தாலஜி படம்.
திரையுலகில் தற்போது ஆந்தாலஜி என்று அழைக்கப்படும் ஒரு சில குறும்படங்களின் குவியம் பிரபலமாக வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஓடிடி-யில் வெளியான நவரசா என்கிற ஆந்தாலஜி படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
சிம்பு தேவன் இயக்கத்தில் உருவாகும் ‘கசடதபற’ என்கிற அந்தாலஜி படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. படமும் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் வெளியிடப்பட உள்ளதாகக் கருதப்படுகிறது.
படத்தில் ஹரீஷ் கல்யாண், பிரியா பவானி சங்கர், ரெஜினா, சாந்தனு, பிரேம்ஜி, விஜயலட்சுமி, வெங்கட் பிரபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்திற்கு ஜிப்ரான், சாம் சி.எஸ்., சந்தோஷ் நாராயணன், பிரேம்ஜி, யுவன் சங்கர் ராஜா, ஷான் ரோல்டன் ஆகிய ஆறு இசையமைப்பாளர்கள் இசையமைத்துள்ளனர்.