பா.இரஞ்சித் – ஆர்யா கூட்டணியில் வெளியான ‘சார்பட்டா பரம்பரை’ படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘சார்பட்டா பரம்பரை’. கடந்த மாதம் நேரடியாக ஓடிடி-யில் வெளியான இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதில் நடித்த பசுபதி, துஷாரா விஜயன், ஜான் விஜய், ஷபீர் ஆகியோரின் கதாபாத்திரங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.
தற்போது, சார்பட்டா பரம்பரை பட காட்சிகளை வைத்து உருவாக்கப்படும் மீம்ஸ் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. குறிப்பாக இதில் ரங்கன் வாத்தியாராக நடித்துள்ள பசுபதியும், கபிலனாக நடித்துள்ள ஆர்யாவும் சைக்கிளில் போகும் காட்சியை அடிப்படையாக கொண்டு ஏராளமான மீம்ஸ் போடப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சார்பட்டா பரம்பரை படத்திற்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணனும் தன் பங்கிற்கு ரங்கன் வாத்தியாரை மீம் போட்டு கலாய்த்து உள்ளார். அவர் தன் மனைவியுடன் சைக்கிளில் அமர்ந்தபடி இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ‘என்ன வேலை செய்ய விடுங்க வாத்தியாரே’ என பதிவிட்டுள்ளார். சந்தோஷ் நாராயணனின் இந்த பதிவுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.