ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு ஒரு குறிப்பிட்ட குணங்களைக் கொண்டுள்ளனர். சிலர் அன்பாக, சிலர் கோபகாம, சிலரோ மற்றவர்களை ஆதிக்கம் செலுத்துதல், நகைச்சுவையாளராக, குறைசொல்பவர் என பல விதங்களில் உள்ளனர்.இவற்றில் புதிதாக திருமணம் ஆன பின்னர் சில குணங்கள் சேர்ந்து கொள்வதாகவும் கூறலாம். ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு ஒரு குறிப்பிட்ட குணங்களைக் கொண்டுள்ளனர். சிலர் அன்பாக, சிலர் கோபகாம, சிலரோ மற்றவர்களை ஆதிக்கம் செலுத்துதல், நகைச்சுவையாளராக, குறைசொல்பவர் என பல விதங்களில் உள்ளனர்.
உண்மையில் திருமண வாழ்க்கை என்பது கட்டுப்படுத்துவது கிடையாது. விட்டுக் கொடுப்பது. எந்த ஒரு குடும்பத்தில் கணவன் – மனைவி இருவரும் பரஸ்பரம் விட்டுக் கொடுத்து செல்கிறாரோ, நிலைமையை புரிந்து கொண்டு நடந்து கொள்கின்றாரோ அந்த வீடு சொர்க்கம் போல மிக மகிழ்ச்சியாகவும், அமைதி, நிம்மதியுடன் இருக்கும். விட்டுக் கொடுக்காமல், ஒருவரை ஒருவரும், நிலைமையையும் புரிந்து கொள்ளாமல் இருந்தால் வீடு குருஷேத்ரம் போல தான் இருக்கும்.
திருமணமானவுடன் மாமியார் தான் மருமகளைக் கட்டுப்படுத்த நினைக்கிறார் என்றால், சில இடங்களில் மனைவி கணவரையும், கணவன் மனைவியையும் கட்டுப்படுத்தி தன் கீழ் வைத்துக் கொள்ள வேண்டும் என நினைப்பதுண்டு. இப்படிப்பட்ட உறவில் சில நேரங்களில் உறவு அமைதியாக இருந்தாலும், பல நேரங்களில் நிலைமை மோசமாகக் கூடும்.
சிம்மம்
பொதுவாக, சிம்ம ராசியினர் மிகவும் திறமையான, அமைதியான மற்றும் ஆளுமை திறன் கொண்டவர்கள் எனலாம். இந்த ராசி பெண்கள் அதே திறன் கொண்டவர்களாக இருப்பதால், இவர்கள் திருமணத்திற்கு பிறகு மிகவும் அமைதியாக மட்டும் இருப்பார்கள் என நம்ப முடியாது. அவர்கள் தங்கள் வாழ்க்கை துணையை கட்டுப்படுத்தவும், கட்டளையிடவும் முனைவார்கள். அதுமட்டுமல்லாமல் தன் கணவரை தனக்கு விருப்பமான வழியில் வடிவமைக்க, மன நிலையை மாற்றியமைக்க முயல்வார்கள்.
தனுசு
தனுசு ராசி பெண்கள் எப்போதும் மற்றவர்களைக் கட்டுப்படுத்துவதில் விருப்பம் கொண்டவர்கள். அதே சமயம் இவர்கள் மற்றவர்களின் எந்த ஒரு கட்டளைகளுக்கும் கீழ்ப்படிய விருப்பம் இல்லாதவர்களாக இருப்பார்கள். அவர்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் மற்றவர்களின் குறுக்கீட்டை விரும்புவதில்லை. அதோடு தன் கணவரை அதிகம் கட்டுப்படுத்தவும் செய்வார்கள்.
துலாம்
துலாம் ராசி பெண்கள் தலைமைப் பண்பு கொண்டவர்கள், தலைமையை விரும்புகிறார்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையின் ஒவ்வொரு தருணத்திலும் தான் இருக்க வேண்டும், புதுமையை அனுபவிக்க வேண்டும் என நினைப்பதோடு, அவர்களை தங்கள் விரல் நுனியில் கட்டுப்படுத்த வேண்டும் என விரும்புவார்கள்.
கன்னி
கன்னி ராசி பெண்கள் தங்கள் கணவர்களை மிகவும் நேசிக்கிறார்கள். இருப்பினும் அவர்கள் எந்த ஒரு தருணத்திலும் தன்னை விட்டு வேறு யாருடனும் வெளியில் பார்க்க முடியாது. ஏனெனில் தன் அன்பால் ஒவ்வொரு கணமும் தங்கள் கணவரை கட்டுப்படுத்த செய்வார்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசியை சேர்ந்த பெண் தன் கணவரை தங்கள் கணவரை மிக அதிகமாக நேசிக்கிறார்கள். இது அவர்களை தங்கள் துணை மீது அதிகப்படியான பாதுகாப்பை ஏற்படுத்துகிறது. எனவே, அவர்கள் ஒவ்வொரு கணமும் தங்கள் கணவரின் வாழ்க்கையைக் கட்டுப்படுத்த விரும்புகிறார்கள்.